தயாநிதியின் இலாகாவை மாற்ற பிரதமருக்கு அத்வானி கடிதம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் இலாகாவை மாற்ற வேண்டும் என்றுபிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தயாநிதி மாறன் சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் உரிய, நேர்மையானநிலையை மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது இலாகாவை மாற்றவேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

மன்மோகன் சிங் அரசு மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

முன்பு வோல்கர் கமிட்டி அறிக்கை, பின்னர் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம், இப்போதுதயாநதி மாறன் சர்ச்சை. போபர்ஸ் ஊழலை விட மோசமானவை இவை.

முதலில் தனது அமைச்சரவையை சுத்தமாக்கிக் கொள்ள மன்மோகன் சிங் முயலவேண்டும்.

திமுக, அதிமுக கட்சிகள் அறிவித்துள்ள இலவச அறிவிப்புகள் சாத்தியமானவைஎன்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதை நானும் வரவேற்கிறேன்.

ஆனால் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடிய வாய்ப்புகளைப் பெற்ற இந்தத்திட்டங்களை நாட்டு மக்கள் அனைவரும் பயன்படும் வகையில் இந்தியா முழுவதும்அமல்படுத்த அவர் நடவடிககை எடுப்பாரா என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்அத்வானி.

சித்து கோரிக்கை:

இந் நிலையில் டாடா டிடிஎச் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறனிடம் விசாரணைநடத்துவது ஒன்றுதான் உண்மையைக் கண்டறிவதற்கான ஒரே வழி என்று முன்னாள்கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

சென்னை வந்த சித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், டாடாவை மிரட்டியதாகஎழுந்துள்ள சர்ச்சையில் அமைச்சர் தயாநிதி மாறன் மீதான புகாரில் உண்மைஇருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். தயாநிதி மாறனை விசாரிக்க வேண்டும். அது மட்டும்தான் உண்மையைவெளிக்கொணர உதவும்.

இப் பிரச்சினையை பாஜக சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. உண்மை தெளிவாகும்வரை இந்தப் பிரச்சினையை பாஜக விடாது. மக்களின் நம்பிக்கையை தகர்க்கும்வகையிலான புகார்களை தயாநதி மாறன் சந்தித்துள்ளார். இதில் தன்னை சுத்தமானவன்என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. விரைவில் மாறன்விசாரிக்கப்படுவார் என நம்புகிறேன்.

தயாநிதி மாறன் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பெரிதாக்குவோம். எங்களதுகடமையிலிருந்து நாங்கள் விலக மாட்டோம் என்றார் சித்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+