சங்கரராமன்: விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி:
பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்குவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் விசாரிக்கப்பட்டால் இந்த வழக்கில் தங்களுக்கு நியாயம் கிடைக்காதுஎன காஞ்சி சங்கராச்சாரியார்கள் கோரியதையடுத்து இந்த வழக்கு புதுவை அமர்வுநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் அரசின் சார்பில் புதுவை வழக்கறிஞர்கள்தான் ஆஜராக வேண்டும்என்று ஜெயேந்திரர் தரப்பு கோரியது. ஆனால் இதை எதிர்த்து தமிழக அரசு சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் தமிழக அரசு வழக்கறிஞரே ஆஜராகலாம்என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜெயேந்திரர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷணன், ஜெயின் ஆகியோர்முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயேந்திரர் தரப்பில் பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜரானார். இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் புதுவை நீதிமன்றத்தில் நடந்து வரும்விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு உள்ளிட்ட பிரதிவாதிகளுக்குஉத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications