லாட்டரி மன்னன் கே.ஏ.எஸ்.சேகர் மரணம்
மதுரை:
தமிழக லாட்டரிச் சீட்டு மன்னன் கே.ஏ.எஸ்.சேகர் (வயது 62) மதுரையில்மரணமடைந்தார்.
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனையில் தனக்கென தனி பாணியைஉருவாக்கியவர் சேகர். தமிழகத்தின் அத்தனை பகுதிதியிலும் சேகரின் கடைகள்இல்லாமல் இருந்ததில்லை.ஒவ்வொரு ஊர் பஸ் நிலையத்திலும் சேகர் கடையில் ஒலிக்கும் கரகரப்பானவிளம்பரக் குரல் தமிழக மக்களின் காதுகளுக்கு மிகவும் பரிச்சயமானது.
வெற்றியின் உச்சிக்குப் போன சேகர் சில வருடங்களாக பெரும் சரிவுகளை காணஆரம்பித்தார். லாட்டரிச் சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை நீக்க மன்னார்குடி வகையறாவைச் சேர்ந்த விஐபியிடம் சிலகோடிகளைத் தந்தார் சேகர். ஆனால், தடை நீக்கப்படவில்லை. இதையடுத்துபணத்தைத் திருப்பிக் கேட்டார்.
இதனால் பெரும் சிக்கலில் மாட்டினார். அவர் மீது பல்வேறு வழக்குகள்போடப்பட்டன. வணிக வரி ஏய்ப்பு வழக்கில் பெரும் அடியைச் சந்தித்தார்.
இந்த வழக்கில் கைது செய்ப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வந்தார். சிலசொத்துக்களையும் இழந்தார்.
வழக்குகளில் சிக்கி மனம் நொந்திருந்த சேகர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மதுரையில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
சேகருக்கு மனைவி, மகன், 4 மகள்கள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் இன்று(திங்கள்கிழமை) நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications