சிங்கள தாக்குதல்: பழ.நெடுமாறன் போராட்டம்
சென்னை:
சிங்கள ராணுவத்தின் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து 3ம் தேதி சென்னையில்உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளரும், தமிழர்தேசிய இயக்கத் தலைவருமான பழ. நெடுமாறன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ளஅறிக்கையில்,கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வந்த அமைதியான சூழலைக்கெடுக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த சிங்கள அரசுதிரிகோணமலைப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எதிராக முப்படைகளையும் ஏவிதாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமானோர்படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகஇருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
சிங்கள அரசின் இந்தத் தாக்குதலுக்கு தமிழகத்தின் கண்டனத்தைத் தெரிவிக்கும்வகையில் 3ம் தேதி காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஊர்வலமாகசென்று இலங்கை துணைத் தூதர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனமுடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே கட்சி வேறுபாடு இன்றி தமிழர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
எங்களை புலிகள் தாக்கினர்: இலங்கை கடற்படை
இதற்கிடையே வட கிழக்குப் பகுதியில் ரோந்து சென்ற தங்களது கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகஇலங்கை கடற்படை கூறியுள்ளது.
கடற்படையின் செய்தித் தொடர்பாளர் தஸ்ஸநாயகே கூறுகையில், இன்று காலை எங்களது டுவோரா ரக படகின்மீது புலிகல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலில்5 வீரர்கள் காயமடைந்தனர் என்றார்.
இதற்கிடையே திரிகோணமலையில் கடற்படை வீரர்கள் கரைப் பகுதியில் ரோந்து சென்றபேது கண்ணி வெடிவெடித்ததில் 4 பொது மக்கள் பலியானதாகவும் 4 வீரர்கள் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications