வைகோவுக்கு ஜெ. போட்ட நிபந்தனை: டிஆர்
கோவை:
தென்றல்னா வீச வேண்டும், ராஜேந்தர்னா பேச வேண்டும். நான் அரசியலுக்குவந்திருப்பது சம்பாதிக்க அல்ல, சாதிக்க, மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க என்றார்விஜய டி. ராஜேந்தர்.
கோவை பேரூர் தொகுதியில் லட்சிய திமுக சார்பில் போட்டியிடும் தங்கவேல்என்பவரை ஆதரித்து ரயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி இயக்குனர்விஜய டி.ராஜேந்தர் பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், சுயமரியாதையோடு நாங்கள் போட்டியிடுகிறோம். எங்களைசட்டசபைக்கு அனுப்பினால் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவோம். நான்அரசியலுக்கு வந்தது சம்பாதிக்க அல்ல, சாதிக்க, மக்கள் பிரச்சினைகள் குறித்துவிவாதிக்க.
சந்தனம் என்றால் பூச வேண்டும். தென்றல் என்றால் வீச வேண்டும், ராஜேந்தர்னாபேச வேண்டும்.
நாடு எங்கும் டாஸ்மாக். பிள்ளைகள் வாங்க வேண்டும் பாஸ் மார்க். டீக்குத் தேவைபாலு, இந்த டி.ஆர். நிறுத்தியிருக்கான் புது ஆளு, அவர்தான் நம்ம தங்கவேலு.
சிம்புன்னா ஸ்டைலு, சிக்குபுக்குண்ணா ரயிலு, மாட்டுக்கு இருப்பது கொம்பு, இந்தத்தேர்தலில் நீங்கள் தர வேண்டும் தெம்பு என்றார்.
இந் நிலையில் இன்று காலை சன் டிவி வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பேசியராஜேந்தர், வைகோவையும் திருமாவளவனையும் தேர்தலில் போட்டியிடக் கூடாதுஎன்று முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துவிட்டார்.
இதனால் தான் அவர்கள் போட்டியிடவில்லை. 35 சீட் கொடுத்தபோது இந்தநிபந்தனையை ஜெயலலிதா விதித்தார். அதை வைகோவால் எதிர்த்துப் பேசமுடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications