சரக்கு ரயில் தடம் புரண்டது: சென்னை-பெங்களூர் ரயில்கள் ரத்து

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்:

பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டது. இதையடுத்துபெங்களூர்-சென்னை இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 1 மணியளவில் அரக்கோணம் அருகே இச் சம்பவம் நடந்தது. இதனால் சென்னை-பெங்களூர்இடையிலான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இன்று காலை 6 மணிக்குத் தான் ஒரு பாதை சீரானது.

இதையடுத்து நிறுத்தப்பட்ட ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டுச் சென்ன. இவை இன்று பகலில் தான் ஊர்களைச்சென்றடைந்தன.

பல ரயில்கள் தாமதமானதால், இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை-மைசூர்எக்ஸ்பிரஸ் ரயிலும் அடக்கம்.

அதே போல சென்னை-கோவை, கோவை-சென்னை இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னை-மைசூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் அவற்றின்இணை ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை-பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ், சதாப்தி ஆகியவையும் ரத்தாகியுள்ளன.

கோடை விடுமுறையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் இச் சம்பவம்நடந்து ரயில்கள் ரத்தாகிவிட்டன. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

ரயில்கள் எப்போது புறப்படும் என்ற விவரத்தை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை 25354854,25024545, 25024544 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+