சைதை பா.பி. வேட்பாளரை கடத்த முயற்சி!
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்தவேட்பாளர் விஸ்வநாதனை, சிலர் காரில் கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களை அதிமுவினர் குறிவைத்து விட்டதால், அக்கட்சி வேட்பாளர்கள் இன்னும் சுதந்திரமாக பிரசாரம் செய்யமுடியாமல் தடுமாறி வருகிறார்கள்.நடிகர் கார்த்திக்கே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பிறகேபிரசாரத்தில் ஈடுபடும் நிலை உள்ளது.
அதிமுக மற்றும் உளவுப் பிரிவு போலீசாரின் கடுமையான முயற்சிகளின் விளைவாகபார்வர்ட் பிளாக் கட்சியின் பல்வேறு வேட்பாளர்கள் அதிமுகவுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் சைதாப்பேட்டைதொகுதி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் விஸ்வநாதனை சிலர் காரில் கடத்தமுயன்றுள்ளனர்.
சைதை தொகுதியில் அதிமகவும், பாமகவும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுகிறார். சிலர்இவரை அணுகி 3 லட்சம் தருகிறோம், போட்டியிலிருந்து விலகி விடு என்றுமிரட்டியுள்ளனர்.
ஆனால் விஸ்வநாதன் பணியவில்லை. இந் நிலையில் வேளச்சேரி குருநானக் கல்லூரிஅருகே (இங்கு மதுரை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான முக்குலத்தோர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள்) விஸ்வநாதன் ஓட்டு வேட்டையில்ஈடுபட்டிருந்தார்.
அங்கிருந்து திரும்பும்போது ஒரு கும்பல் இவரை வழிமறித்து காரில் கடத்திச் செல்லமுயன்றார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அக்கும்பலிடமிருந்து தப்பிய விஸ்வநாதன் இதுகுறித்து கிண்டி போலீஸில் புகார்கொடுத்தார். இந்தக் கடத்தல் புகார் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications