ஏழைகளுக்கு 10 ஏக்கர் நிலம்: புதிய தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 10 ஏக்கர் நிலம் தருவோம் என்று புதிய தமிழகம்அறிவித்துள்ளது.

இரு பெரும் கழகங்களால் தனித்து விடப்பட்ட புதிய தமிழகம் கட்சி பகுஜன் சமாஜ்கட்சியின் கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடுகிறது. பிரசாரம் முடியப்போகும்நிலையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார். (நல்லவேளை தேர்தலுக்கு முன்பேவெளியிட்டாரே)

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்களைப் பிரித்து, அந்தந்த பகுதியில் வசிக்கும்நிலமற்ற ஏழை விவசாயிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்போருக்கு தலா 10ஏக்கர் வழங்கப்படும்.

மலைப் பகுதி தோட்டத் தொழிலாளர்களுக்கு குடும்பத்துக்கு 5 ஏக்கர் நிலம்வழங்கப்படும். கோவில், அறக்கட்டளைக்கு சொந்தமான, நிலங்களையும், பினாமிநிலங்களையும் மீட்டு நிலமற்ற, பிற தொழில் அல்லாத குடும்பத்தினருக்கு தலாஇரண்டரை ஏக்கர் நிலம் தரப்படும்.

வீட்டு மனை இல்லாத குடும்பங்களுக்கு வருமானத்தைக் கணக்கில் கொண்டு 3சென்ட் வீட்டு மனையோடு 75 சதவீத மானியத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் கூலி ரூ. 150 ஆக உயர்த்தப்படும். அமைப்புச் சாராதொழிலாளர்களுக்கு ஆண், பெண் வேறுபாடின்றி 60 வயது வந்த நிலையில், மாதம்ரூ. 500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

வேளாண்மைக்கு குறைந்த வட்டியில் பயிர்க் கடன், பண்ணை மேம்பாட்டுக் கடன்,சுய தொழில் தொடங்க சுலபக் கடன் ஆகியவை வழங்கப்படும் என்பது உள்ளிட்டபல்வேறு வாக்குறுதிகளை புதிய தமிழகம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+