மெரீனாவில் ஓடி ஓடி ஓட்டு வேட்டை!
சென்னை:
சென்னை மெரீனா, பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைகளில் வாக்கிங், ஜாகிங்சென்றவர்களிடம் திமுக, அதிமுக சார்பில் தொண்டர்கள் ஓடி ஓடி ஓட்டு வேட்டைநடத்தி வருகின்றனர்.
காலையும், மாலையும் சென்னை கடற்கரைகளில் வாக்கிங் வருபவர்கள், ஜாகிங்செல்பவர்களிடம் வேட்பாளர்களும், கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.அதிகாலை நடிகர் நெப்போலியன், மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே நின்றுகொண்டு வருவோர், போவோரிடம் வாக்கு சேகரித்தார். அதேபோல அதிமுகவேட்பாளர் பதர் சயீத், கட்சியினருடன் விவேகானந்தர் இல்லம் அருகே நின்று ஓட்டுகேட்டார்.
நெப்போலியன் பெசன்ட் நகர் கடற்கரையிலும் சென்று ஓட்டு கேட்டார். இதை அறிந்தபதர் சயீத்தும் விவேகானந்தர் இல்லத்திலிருந்து காந்தி சிலைக்கு இடம் பெயர்ந்தார்.
சற்று நேரத்தில் மயிலாப்பூர் வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகரும் அங்கு வந்தார்.இருவரும் சேர்ந்து (திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் தொகுதிகளின் பார்டர் பகுதிஇது!) வாக்கு சேகரித்தனர்.
இதேபோல, ஜனதாக் கட்சியின் மயிலை தொகுதி வேட்பாளர் சந்திரலேகாவும்கடற்கரையில் நின்று ஓட்டு கேட்டார்.
வேட்பாளர்கள் இவ்வாறு ஓட்டு கேட்க, கூட வந்திருந்த கட்சியினர் ஜாகிங்சென்றவர்களிடம் ஓடி ஓடி பிரசாரத் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து ஓட்டுசேகரித்தனர்.












Click it and Unblock the Notifications