அதிமுகவினர் மிரட்டுகிறார்கள்: லீலாவதி புகார்
மதுரை:
ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்யக் கூடாது என்று அதிமுகவினர் தொலைபேசிமூலம் மிரட்டுவதாக ஜெயலலிதாவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளஎம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி புகார் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆண்டிப்படடி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் பிரசாரம் செய்யவந்துள்ளேன். நேற்றே நான் பிரசாரத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நான்பிரசாரம் செய்யப் போவதாக சொன்னதிலிருந்து எனக்கு போன் மூலம் யார் யாரோமிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
![]() |
ஆண்டிப்பட்டிக்குப் போகக் கூடாது, பேசாமல் ஊருக்குத் திரும்பிப் போய் விடுங்கள்என்று கூறி மிரட்டுகிறார்கள். மீறிப் போனால் என்ன நடக்கும் என்பதைஎங்களாலலேயே கூட கணிக்க முடியாது என்றும் பயமுறுத்துகிறார்கள்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
எத்தகைய மிரட்டல் வந்தாலும் நான் திட்டமிட்டபடி ஆண்டிப்பட்டியல் பிரசாரம்செய்வேன். அந்த அம்மாவைப் பற்றிய பல தகவல்களைச் சொல்லாமல் ஓயமாட்டேன்.
தேர்தல் நேரத்தில் மட்டும்தான் அந்த அம்மாவுக்கு சித்தப்பா (எம்.ஜி.ஆர்) நினைவுவரும். மற்ற நேரங்களில் அவருக்கு மறந்து போய் விடும்.
நான் ஜெயலலிதாவை எதிர்த்துத்தான் பிரசாரம் செய்யவுள்ளேன். எந்தக் கட்சிக்கும்ஆதரவாக நான் ஓட்டு கேட்க மாட்டேன் என்றார் லீலாவதி.













Click it and Unblock the Notifications