போலீஸ் உதவியுடன் சாதிக் கலவரத்தைத் தூண்ட ஜெ. சதி: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனக்கு தோல்வி உறுதி என்பது உறுதியாகிவிட்டதால் உளவுத் துறை மூலம்தமிழகத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு தேர்தலை ஒத்தி வைக்க ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

மே 8ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 170இடங்கள் வரை கிடைக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட மத்திய மற்றும் மாநிலஉளவுத் துறையினரின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

திமுக கூட்டணிக்கு சாதகமாக அலை வீசி வருவதால் அதை குலைத்து, அதிமுகவுக்குசாதகமாக நிலைமையை மாற்றுமாறு உளவுத் துறையினரை ஜெயலலிதா நிர்ப்பந்தம்செய்து வருகிறார்.

தென் மாவட்டத்தில் ஒரு தலித் தலைவர் (பசுபதி பாண்டியன்) மீது நடந்தவெடிகுண்டுத் தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அதிமுகதிட்டமிட்டுள்ளது.

இதை வைத்து சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு 75 தொகுதிகளில் தேர்தலைநடத்தாமல் தள்ளிப் போட அவர் சதி செய்து வருகிறார்.

அரசின் நெருக்குதல்களுக்கு அடி பணியாமல் காவல்துறை அதிகாரிகள் செயல்படவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் ஒரு வாரம்தான் இந்த அரசுபதவியில் இருக்கப் போகிறது.

அப்படிப்பட்ட அரசுக்காக காவல்துறையினர் தங்களை அசிங்கப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+