நான் முதல்வராகும் திட்டம் இல்லை: ஸ்டாலின்
சென்னை:
திமுக தேர்தலில் வென்ற பிறகு நான் முதல்வராக ரகசியத் திட்டம் எதையும்தீட்டவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின்பேசுகையில்,கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில், மக்கள் நலத் திட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்தனை திட்டங்களும்முடக்கப்பட்டன, புறக்கணிக்கப்பட்டன.
மக்கள் விரோத ஜெயலலிதா அரசின் ஆணவப் போக்குக்கு இதுவே தக்க சாட்சி.பல்வேறு அரசுத் துறைகளில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது.
பொதுப் பணித்துறை உள்ளிட்ட சில துறைகளில் ரூ. 280 கோடி அளவுக்கு ஊழல்நடந்துள்ளது.
அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டிய தருணம் இது. அதற்கான நேரம் வந்து விட்டது.திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை.மாறாக திமுகவின் தேர்தல் அறிக்கையே 234 தொகுதிகளிலும் போட்டியில் உள்ளது.
நான் முதல்வர் பதவியைப் பிடிக்க ரகசியத் திட்டம் தீட்டி செயல்படுவதாகசொல்கிறார்கள். திமுக திறந்த புத்தகம். போயஸ் தோட்டம் தான் ரகசியத்துக்கும்திரைமறைவு வேலைகளுக்கும் பேர் போனது.
திமுக தொண்டர்களின் கட்சி. இங்கு ரகசியத்துக்கெல்லாம் இடமே கிடையாது என்றார்ஸ்டாலின்.
ஜெ மீது தயாநிதி தாக்கு:
கள்ளக்குற்ச்சியில் பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசுகையில்,
பரிட்சையில் காப்பி அடிப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தேர்தல் எனும்பரிட்சையில் காப்பி அடிக்கும் முதல் ஆள் ஜெயலலிதா தான்.
நன்றாகப் படித்தவன் தேர்வை பயமில்லாமல் எழுதுவான். படிக்காவன் என்னசெய்வான்?. பிட் அடிப்பான், அங்கே இங்கே திரும்பி அடுத்தவன் எழுதியதைப்பார்த்து காப்பி அடிப்பான்.
ஜெயலலிதாவும் அதையே தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார். திமுகவின்தேர்தல் அறிக்கை பட்டி தொட்டியையெல்லாம் கலக்கி எடுத்துக் கொண்டிருக்கும்நிலையில் நாங்கள் கூறியுள்ள திட்டங்களை எல்லாம் இப்போது வரிக்கு வரி காப்பிஅடித்து அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா.
சுயமாக சிந்திக்கத் தெரியாத ஜெயலலிதா, நாட்டை நிர்வகித்த விதம் தான்உங்களுக்கெல்லாம் தெரியுமே. அவருக்குத் தேவை நல்ல ஓய்வு. அதைக் கொடுங்கள்என்றார்.












Click it and Unblock the Notifications