கருணாநிதி மீது வைகோ ரூ1 கோடி நஷ்ட வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கலிங்கப்பட்டியில் நான் ஜாதிக் கலவரத்தைத் தூண்டியதாக அபாண்டமாக பேசியுள்ளதிமுக தலைவர் கருணாநிதி மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி வேட்பாளர் தாவூத் மியாகானுக்கு ஆதரவாக வைகோ இன்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில்,

அதிமுக ஆட்சியில் ஜாதிக் கலவரம் இல்லை, மதக் கலவரம் இல்லை. அனைத்துப்பிரிவினரும் அமைதியாக, ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

ஆனால் அண்ணன் கலைஞர் ஆட்சி நடத்தியபோது, எங்கு பார்த்தாலும் ஒரேகலவரம். கோவையில் தொடர் குண்டுவெடிப்பு, தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம். அண்ணன், தம்பிகளாகப் பழகியவர்கள் வெட்டிக் கொண்டு செத்தனர்.சந்தைக்குப் போனவர்கள் கை கால் இழந்தனர். வேல் கம்பு ஈட்டிகள் நடமாடின.விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி என தென் மாவட்டங்கள் பதட்டத்தில்வீழ்ந்தன.

இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.இப்படிப்பட்ட நிலையில் சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதாஎன்று விதை விதைக்கிறார் ஜாதிக் கலவரத்திற்கு.

அமைதி இருக்கக் கூடாது, கலவரம் வரட்டும், ரத்தம் ஓடட்டும், மக்கள் வெட்டுப்பட்டுதுண்டு துண்டாக கிடக்கட்டும் என்பதற்காகவே திட்டமிட்டு பேசினால், கலவரம்ஏற்பட்டால் ஒரு பிரிவினர் ஓட்டு தனக்கு கிடைக்கும். லாபம் அடையலாம் என்றுகருதியே அப்படிச் சொன்னார்.

இதைப் பற்றி நான் கருத்து சொன்னால் மிருக சாதிகளுக்குள் மோதல் ஏற்பட்டால்நான் என்ன செய்வது என்கிறார். அதுபற்றி கேட்டால் இலக்கிய ரசனையுடன்கூறியதாக சொல்கிறார். இது என்ன இலக்கியம்?

திமுகவில் துரும்பைக் கூட தூக்கிப் போடாத பேரப் பிள்ளையை மத்தியஅமைச்சராக்குகிறார். அந்தப் பேரப் பிள்ளை என் மீது வழக்கு போடுகிறார்.போடட்டும். சம்மனை அனுப்பியும் நான் வாங்கவில்லையாம். வெளியூரில் இருந்துஇன்றுதான் சென்னை வந்துள்ளேன். இன்று அனுப்புங்கள் வாங்கிக் கொள்கிறேன்.வைகோ எதற்கும் பயப்படுகிறன் அல்ல.

பாஞ்சாலங்குறிச்சி சீமையில் இருந்து வந்தவன். தூக்குக் கயிற்றை முத்தமிடுவான்,மண்டியிட மாட்டான்.

1993ல் கொலைப்பழி சுமத்தி என்னை திமுகவிலிருந்து விரட்டினார் கலைஞர்.இப்போது இன்னொரு பழியை சுமத்தியுள்ளார். கலிங்கப்பட்டி கிராமத்தில் நான் சாதிக்கலவரத்தைத் தூண்டினேனாம். கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து சாதியினரும்ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இந்தியாவிலேயே மாதிரி கிராமமாக அதுவிளங்குகிறது.

ஆதி திராவிட மக்களுக்கும், பிற ஜாதியினருக்கும் அங்கு ஒரே சுடுகாடுதான். ஆதிதிராவிடர் சுடுகாட்டில்தான் எனது தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.

என்னைப் பார்த்து கலைஞர் கேட்கிறார். ஆதி திராவிட மக்களிடம் எனது திமிரைக்காட்டி, கலிங்கப்பட்டியில் 2,3 ஆதி திராவிடர்கள் சாகக் காரணமாக இருந்தாய் எனகம்யூனிஸ்டுகள் கலைஞரிடம் சொன்னார்களாம். நான்தான் அவர்களிடம் கெஞ்சி,விட்டு விடச் சொன்னேன் என்கிறார் கலைஞர்.

இது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய், கோயபல்ஸ் பிரசாரம். அப்படி ஒரு சம்பவம்நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை. நாங்கள் ஒரே குடும்பமாக வாழ்கிறோம்.எனது வீட்டில் அண்ணா, காமராஜர், கலைஞர் உட்கார்ந்த இடத்தில்தான் ஆதிதிராவிடசகோதரர்கள் உட்காருகிறார்கள்.

இரவு 12 மணிக்கு வந்து கதவைத் தட்டி உடல் நலம் சரியில்லை என்றாலும் காரில்ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறோம். அப்படிப்பட்ட என் மீது இப்படி ஒரு பழியா?இந்தப் பழியை சுமத்திய உங்கள் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடப்போகிறேன்.

சேப்பாக்கம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, சட்டசபைக்குச் சென்றுஜனநாயக கடமையை ஆற்றவில்லை. இப்போது எதற்காக மீணடும்போட்டியிடுகிறார்? இங்கு கலைஞர் வெல்லப் போவதில்லை. சட்டசபைக்கு ஏன்போகவில்லை என்று கேட்டால் நான் மட்டுமா போகவில்லை, எம்.ஜி.ஆர். போனாரா,ஜெயலலிதா போனாரா என்று எதிர்கேள்வி கேட்கிறார் கலைஞர்.

திமுக ஆட்சியில்தான், சட்டசபையில் எம்.ஜி.ஆர் மீது செருப்பு வீசப்பட்டது.ஜெயலலிதா மானபங்கப்படுத்தப்பட்டார். புத்தகங்களால் தாக்கி அவரது சேலையைப்பிடித்து இழுத்தனர். வல்லூறுகள் மத்தியில் சிக்கிய மணிப்புறா போல அவர் துடித்தார்.மூப்பனார் தடுத்து சில அடிகளை அவர் வாங்கிக் கொண்டார்.

தன்னைத் துகிலுரிய முயற்சித்து குற்றம் சாட்டப்பட்ட துரைமுருகன் மீது அதிமுகஆட்சியில் ஒரு துரும்பு கூட விழவில்லை. துரைமுருகனை மாண்புமிகு உறுப்பினர்என்றுதான் ஜெயலலிதா அழைத்தார். அதே மரியாதைதான் கலைஞருக்கும்கிடைத்திருக்கும் என்றார் வைகோ.

சன் டிவி விட்டலாச்சார்யா மேஜிக்:

முன்னதாக விழுப்புரம் மாவட்டம் வானூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கணபதியை ஆதரித்து மரக்காணத்தில் பிரசாரம் மேற்கொண்ட வைகோ,

ஜெயலலிதா வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகளைப் பார்த்து திமக தரப்புபயத்தில் உறைந்து போயுள்ளது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது குடும்பத் தொலைக்காட்சிமற்றும் 1 ரூபாய் பத்திரிக்கையில் தினசரி பொய்யான செய்திகளை வெளியிட்டு,மக்கள் ஆதரவு தங்கள் பக்கம்தான் இருப்பது போல செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.

குறைவாக உள்ள கூட்டத்தை பெரிய கூட்டம போல காட்டுவதற்காக கிரேன் மூலம்ரொம்ப உயரத்திலிருந்து படம் பிடித்து, அதை விட்டலாச்சார்யா படங்களில் வருவதுபோல தந்திரக் காட்சிகளாக மாற்றி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அவர்கள் காட்டும் கூட்டத்துக்கும், பேச்சாளர்கள் பேசிய கூட்டத்திற்கும் ஒருசம்பந்தம் இருக்காது.

இவர்கள் என்னதான் செய்தாலும் வருகிற தேர்தலில் அதிமுகே அமோக வெற்றிபெறப் போவது உறுதி. திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என்றார்வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+