திமுகவினர் பதுக்கிய கிரிக்கெட் பேட்கள் பறிமுதல்
சேடப்பட்டி:
ஓட்டு வேட்டையாடுவதற்காக இளைஞர்களுக்குக் கொடுக்க திமுகவினர் பதுக்கிவைத்திருந்த நூற்றுக்கணக்கான கிரிக்கெட் மட்டைகள், பந்துகளை தேர்தல்அதிகாரிகள் கைப்பற்றினர்.
சேடப்பட்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிரிக்கெட் குழுக்களுக்கு தருவதற்காகநூற்றுக்கணக்கான கிரிக்கெட் மட்டைகள், பந்துகளை வரவழைத்த திமுகவினர் அதைபேரையூர் சாலையில் சமத்துவ புரம் அருகே ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்தனர்.இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். மேலும்டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்திலும் புகாரும் தந்தனர்.
இதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு போலீஸார் அங்கு விரைந்தனர். தொகுதிஉதவித் தேர்தல் அதிகாரி முத்துலட்சுமியும் அங்கு வந்தார்.
குறிப்பிட்ட இடத்தில் ஒரு அறையில் போட்டு வைக்கப்பட்டிருந்த 6 மூட்டைகளைபோலீஸார் கைப்பற்றினர்.
அந்த மூட்டைகள் நிறைய கிரிக்கெட் மட்டைகள், பந்துகள் இருந்தன. இவற்றைபோலீஸார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என திமுகவினர்மறுத்துள்ளனர். அதிமுகவினரே கொண்டு வந்து வைத்துவிட்டு எங்கள் மீது புகார்சொல்லி செட்-அப் நாடகம் நடத்தியுள்ளனர், இதற்கு போலீசும் உடந்தை என்றனர்.
சேடப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் தளபதி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்முன்னாள் அமைச்சர் துரைராஜ் நிற்கிறார்.
தளபதிக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா குடும்பத்தோடுகளமிறங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications