கருத்துக் கணிப்பு: திமுகவுக்கே வெற்றி-லயோலா அதிமுகவே வெல்லும்-ஸ்டார், டைம்ஸ் நெள டிவி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று லயோலாகல்லூரி நடத்தியுள்ள புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்து, அந்தக் கட்சியே ஆட்சிஅமைக்கும் என ஸ்டார் நியூஸ் டிவி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நெளடிவி நடத்திய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.சென்னை லயோலா கல்லூரி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகிறது.
முதலில் அதிமுகவுக்கே மக்களிடையே பெரும் ஆதரவு இருந்தது இதன் கருத்துக்கணிப்பில் உறுதியானது. ஆனால், பிரச்சாரம் தொடங்கிய பின்னர் நடத்தப்பட்டகருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இந் நிலையில் சமீபத்தில் புதிய கருத்துக் கணிப்பை ஒன்றை நடத்தியது லயோலாகல்லூரி. ஏப்ரல் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை 68 தொகுதிகளில் மொத்தம்3,000க்கும் மேற்பட்டோரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை லயோலா கல்லூரியின்காட்சி தகவலியல் துறை மாணவர்கள் மேற்கொண்டனர்.
இதன் முடிவுகளை துறைத் தலைவர் பேராசிரியர் ராஜநாயகம் இன்று வெளியிட்டார்.
கருத்துக் கணிப்பு விவரம்:
திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் இடையே பெரும் இடைவெளிகாணப்படுவதால் திமுக கூட்டணிக்கு 134 முதல் 160 இடங்கள் வரை கிடைக்கக்கூடும் என இந்தக் கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்தோரின் எண்ணிக்கை 45.1 சதவீதம். சிலவாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இது 44.5 சதவீதமாகஇருந்தது.
அதிமுக அணிக்கு ஆதரவானோரின் எண்ணிக்கை 39.5 சதவீதம. இது கடந்த சுற்றில்இது 40.1 சதவீதமாக இருந்தது.
விஜய்காந்துக்கு 11.7 சதவீத ஆதரவு:
விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு 11.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு திமுக அணி என்று 43.7 சதவீதம்பேரும், அதிமுக அணி என்று 42.7 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.
திமுக 103 தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய நிலையில் உள்ளது. அதிமுகவுக்கு 81தொகுதிகள் வரை கிடைக்கலாம்.
49ல் கடும் போட்டி:
49 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு தேமுதிகவால் மற்ற இருகட்சிகளுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் அமோக வெற்றி பெறக் கூடியவாய்ப்புள்ளது.
தற்போதைய நிலை தொடருமானால் திமுக அணிக்கு 134 தொகுதிகள் வரைகிடைக்கலாம். திமுகவுக்கு சாதகமான நிலை மேலும் சில சதவீதம் அதிகரித்தால் 161தொகுதிகள் வரை கிடைக்கலாம்.
திமுக ஆதரவு குறைந்தால் அதிமுகவுக்கு 102 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும்.
விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 3வது இடத்தைப் பெறும்.தமிழகம் முழுவதும் இந்தக் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மாணவர்கள், படித்தவர்கள், தனியார் துறையினர், அரசு ஊழியர்கள், முதல் முறையாகவாக்களிக்க உள்ளவர்கள் மத்தியில் விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு காணப்படுகிறது.
விஜய்காந்தால் அதிமுகவுக்கு பாதிப்பு:
முதல் முறையாக வாக்களிப்போரில் 27 சதவீதம் பேர் விஜயகாந்த் கட்சிக்கேவாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். இக்கட்சி, அதிமுகவின் ஓட்டு வங்கியில் தான்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது.
பெண்கள் மத்தியில் அதிமுகவுக்கு இணையாக திமுகவுக்கும் ஆதரவுகாணப்படுகிறது. இது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாகும்.
அதிமுகவுக்கு 43.9 சதவீத பெண்களின் ஆதரவும், திமுக அணிக்கு 42.3 சதவீதஆதரவும் உள்ளது.
முதன் முதலில் வாக்களிப்போரில் 42.9 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகஉள்ளனர்.
கார்த்திக், சரத்குமார் வெத்துவேட்டுகள்:
அதேசமயம், நடிகர்கள் கார்த்திக், சரத்குமாரால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த முறை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது திமுக கூட்டணிக்கு 44.5 சதவீத ஆதரவு கிடைத்திருந்தது. இந்த முறை அது அதிகரித்து 45.1சதவீதமாகியுள்ளது.
அதே நேரத்தில் அதிமுகவுக்கு கடந்த முறை 40.1 சதவீத ஆதரவு இருந்தது. அது இப்போது 39.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
திமுக, அதிமுக அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாச சதவீதம் 5.6 ஆக உள்ளது என்று ராஜநாயகம் தெரிவித்தார்.
நிலைமை திமுகவுக்கு சாதகமாகத் திரும்ப அதன் தேர்தல் அறிக்கையே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதிமுக ஆட்சியை பிடிக்கும்-ஸ்டார் டிவி:
இதற்கிடையே தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்து, அந்தக் கட்சியே ஆட்சி அமைக்கும் என ஸ்டார் நியூஸ் டிவிநடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ் டிவியும், ஏசி நீல்சன் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ள தகவல்கள்:
100 சட்டசபைத் தொகுதிகளில் 20,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அதிமுக கூட்டணிக்கு 46 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு 45சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிற கட்சிகளுக்கு ஆதரவாக 9 சதவீதம் பேர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணிக்கு 119 தொகுதிகள் முதல் 134 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும். திமுக கூட்டணிக்கு அதிகபட்சம் 115 தொகுதிகள் வரைகிடைக்கக் கூடும். ஆட்சி அமைக்க வேண்டுமானால் 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
எனவே அதிமுக கூட்டணியே ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
பிற கட்சிகளுக்கு 2 முதல் 3 இடங்கள் வரை கிடைக்கலாம். அடுத்த முதல்வராக ஜெயலலிதாவுக்கே அதிகபட்ச ஆதரவு கிடைத்துள்ளது. 2வதுஇடத்தை கருணாநிதி பிடித்துள்ளார் என்று இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நெள கருத்துக் கணிப்பு:
இதேபோல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நடத்தும் டைம்ஸ் நெள டிவியிலும் அதிமுக கூட்டணியே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications