பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் மரணம்
மும்பை:
தனது தம்பியால் சுடப்பட்ட பாஜக மூத்த தலைவரான பிரமோத் மகாஜன் இன்று சிகிச்சை பலனின்றிமரணமடைந்தார்.
![]() |
12 நாட்களுக்கு முன் (ஏப்ரல் 22ம் தேதி) மகாஜனை அவரது மும்பை வொர்லியில் உள்ள அவரதுஅபார்ட்மெண்டில் வைத்து சுட்டார் அவரது தம்பி பிரவீன் மகாஜன். இதில் மூன்று குண்டுகள் கல்லீரல், கணையம்,சிறுகுடலுக்குள் புகுந்து பெருமளவில் ரத்தம் வெளியேறியது.
இதையடுத்து இந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகாஜனுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.மூன்று முறை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. ஆனாலும் அவரது உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்துகவலைக்கிடமாகவே இருந்தார்.
அவரது சிறுநீரகம் இயங்காததால் தொடர்ந்து டையலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
குண்டுகள் தொடர்ந்து உடலிலேயே இருந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் உடல் நிலை தேறவில்லை.தொடர்ந்து சுய நினைவற்ற நிலையிலேயே இருந்த அவர் இன்று மாலை 4.10 மணிக்கு மருத்துவமனையிலேயேஇறந்தார்.
56 வயதான மகாஜனுக்கு ரேகா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும், பூனம் என்ற மகளும் உள்ளனர்.மகாஜனின் உடல் இன்று மகாராஷ்டிரா பாஜக தலைமையகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்படவுள்ளது. அங்கு பாஜக கொ அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
மகாஜனின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications