டாடாவுடன் சமரசம்: காங் மூலம் திமுக முயற்சி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டாடா நிறுவனத்துடன் சமரசம் பேச காங்கிரஸ் தலைமையை திமுக தலைமை கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அதற்கு காங்கிரஸ் தரப்பு பெரும் தயக்கம் காட்டிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டிடிஎச் விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடாவை அமைச்சர் தயாநிதிமாறன் மிரட்டியதாக கூறப்படும் விவகாரம் வெடித்துள்ள நிலையில் தேர்தலில் அதுதேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தி விடுமோ என்று திமுக தலைமை அஞ்சுகிறது.

எனவே இந்தப் பிரச்சினையை ஒன்றுமில்லாமல் போகச் செய்ய டாடாவிடம் சமரசம்பேசுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாகத் தெரிகிறது.

தயாநிதி மாறன், டாடாவை மிரட்டியது தொடர்பான புகாரை இதுவரை டாடாநிறுவனம் மறுக்கவில்லை. பெருத்த அமைதி காத்து வருகிறது. மேலும் தயாநிதிமாறன் வசம் உள்ள தொலைத் தொடர்புத் துறையை கடுமையாக கண்டித்துபிரதமருக்கு டாடா கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து மாறன் பெயரை கிளியர் செய்து சர்ச்சைக்கு முடிவு கட்ட நினைக்கும்திமுக தலைமை, காங்கிரஸ் தலைவர் சோனியாவை அணுகியுள்ளது.

டாடா நிறுவனத்திடம் பேசி தயாநிதி தொடர்பான புகார்களுக்கு அந்த நிறுவனத்தைஉடனடியாக மறுப்பு தெரிவிக்கச் செய்யுமாறு சோனியாவிடம் திமுக தலைமைகோரியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் டாடா விவகாரத்தில் தலையிட சோனியா விரும்பவில்லையாம். இதனால்காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். பாஜகவும் இப்போது இதில்ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டது. எனவே சமரசப் பேச்சு குறித்து வெளியில்தெரிந்து விட்டால் கட்சிக்குக் கெட்ட பெயராகி விடும் என்று காங்கிரஸ் தரப்புபயப்படுகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+