ஜூனியர் விகடனை விலைக்கு வாங்குகிறது சன் டிவி: வைகோ சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நேர்மைக்கு இலக்கணமான ஜூனியர் விகடன் பத்திரிக்கையை தயாநிதி மாறனும்,கலாநிதி மாறனும் பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் விலைக்கு வாங்கும் முயற்சியில்வெற்றியை நெருங்கி விட்டார்கள் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதுரையில் ஜெயா டிவிக்கு வைகோ அளித்த பேட்டியில்,

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவதாகபல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இதை தயாநிதி மாறனால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதனால் பல்வேறு பத்திரிக்கைககளுக்கு நெருக்கடி கொடுத்து திமுகவுக்கு ஆதரவாககருத்துக் கணிப்புகளை வெளியிட முயற்சித்து வருகிறார்.

கேரளாவின் பிரபலமான மலையாள மனோரமா நாளிதழ் நிறுவனத்தைச் சேர்ந்த தி வீக்ஆங்கில வார இதழ், கேரளாவில் நடந்த தேர்தல் தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பையும் நடத்தவில்லை.

ஆனால் தமிழகத்தில் மட்டும் திடீரென ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளைவெளியிட்டுள்ளது. இல்லாத ஒன்றை இட்டுக் கட்டிக் கூறி திமுகவுக்கு ஆதரவாககருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடடுள்ளது.

இப்போது இவர்கள் ஜூனியர் விகடனை வளைத்து விட்டார்கள். இதில்வேதனையான விஷயம் என்னவென்றால் தினகரனை பணம் கொடுத்துவாங்கினார்கள். அதன் மூலம் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இப்போது ஆனந்த விகடனை வளைத்துள்ளார்கள். ஆனந்த விகடன் பத்திரிக்கைதரதமான, மிகச் சிறந்த, உயர்ந்த பத்திரிக்கை. நேர்மைக்கு இலக்கணமானபத்திரிக்கைக் குடும்பம் அது.

அப்படிப்பட்ட பத்திரிக்கை சமீப காலமாக, சில வெளியில் சொல்ல முடியாதபிரத்யேக காரணங்களினால், சன் தொலைக்காட்சியின் தயவு தேவைப்படும்இக்கட்டில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமான செய்திகளை வெளியட வேண்டியநிலையில் உள்ளது.

அப் பத்திரிக்கையின் நடுநிலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இப்போது முற்றிலும்போய் விட்டது.

வருகிற நாட்களில் திமுக கூட்டணிக்கு 200 இடங்கள் வரை கிடைக்கும் என்றஅப்பட்டமான, பொய்யான செய்தியை வெளியிட அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

அந்த செய்தியை தினகரன், சன் டிவியில் வெளியிட்டு வாக்காளர்கள் மத்தியில்திமுகவுக்கு ஆதரவான பிரமையை ஏற்படுத்தி அதன் மூலம் கொஞ்சம் ஓட்டுக்கள்கிடைக்காதா என்று முயற்சிக்க நினைக்கிறார்கள்.

ஜூனியர் விகடனின் நிருபர்கள் பலர் மிரட்டப்பட்டுள்ளார்கள். உண்மையைச்சொன்னதற்காக அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அந்தப் பத்திரிக்கையை விலைக்கு வாங்க தீவிரமாக முயற்சித்து வந்தனர். அந்தமுயற்சியில் அனேகமாக வெற்றி பெற்று விட்டதாகவே எனக்கு தெரிய வந்துள்ளதுஎன்றார் வைகோ.

வைகோவின் தந்திரம்:

திமுக கூட்டணிக்கு 200 இடங்கள் கிடைக்கும் என ஜூனியர் விகடன் நடத்தியகருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதை அந்தப் பத்திரிக்கை இந்த வாரம் வெளியிடவுள்ளது. அந்த முடிவுகள் வெளிவந்தால் தங்கள் தரப்புக்கு பேரிடியாக இருக்கும் என்பதால் அந்தக் கருத்துக் கணிப்புவெளிவரும் முன்பே அதற்கு ஒரு சாயத்தைப் பூசி அந்தக் கருத்துக் கணிப்பின்நம்பகத்தன்மையை குலைக்க வைகோ முயன்றுள்ளார் என்கிறார்கள் உள் விவரம்அறிந்தவர்கள்.

இது ஒரு preemptive strike மாதிரி என்று சொல்லும் அவர்கள், வைகோவே சொல்வைத் போலநியாய, தர்மத்துக்கு பேர் போன விகடன் குழுமம் நிச்சயம் அந்த வேலையைச்செய்யாது என்பது அதன் பாரம்பரியம் அறிந்தவர்களுக்குத் தெரியும் என்றார்கள்.

நக்கீரன் கருத்துக் கணிப்பு:

இதற்கிடையே நக்கீரன் வார இதழ் முதல் கட்டமாக 80 தொகுதிகளில் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் போட்டி மிகக் கடுமையாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும் 80இடங்களில் 71 இடங்களை திமுக கூட்டணியும் 8 இடங்களை அதிமுக கூட்டணியில்பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

விருத்தாசலத்தில் விஜய்காந்த் வெல்வது உறுதி என்றும் கருத்துக் கணிப்பில்கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+