திமுக தேர்தல் அறிக்கையை எதிர்த்து வழக்கு!
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டிவி, 2 ஏக்கர் தரிசு நிலம் ஆகியவை வழங்கப்படும் என்றுகூறப்பட்டுள்ளதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த பாட்சா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல்செய்துள்ளார். அதில்,நான் தேச நலன் கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன். திமுக தேர்தல் அறிக்கையில் நடைமுறையில்செயல்படுத்த முடியாத இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.
இலவச கலர் டிவி, கேஸ் ஸ்டவ், விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், நிலமற்ற விவசாயிகளுக்கு 2ஏக்கர் இலவச தரிசு நிலம் தருவதாகக் கூறியுள்ளார்கள்.
ஒரு கலர் டிவியின் குறைந்தபட்ச விலை ரூ. 5,000. இதை ஏழைகள் அனைவருக்கும் வழங்க வேண்டுமானால் ரூ.10,000 கோடி தேவைப்படும். சீனாவில் இருந்து ரூ. 2,000க்கு கலர் டிவியை இறக்குமதி செய்யப் போவதாகசொல்கிறார்கள். அப்படியெல்லாம் இறக்குமதி செய்ய முடியாது.
அதே போல மற்ற திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதிட்டங்களையெல்லாம் அமலாக்க வேண்டுமானால் ரூ. 30,000 கோடி தேவைப்படும். இவ்வளவு பணம்எங்கிருந்து வரும். இது ஒரு மோசடியான அறிவிப்பு.
இது குறித்து விளக்கம் கேட்டு திமுகவுக்கு கடிதம் அனுப்பினேன். இதுவரை பதில் இல்லை. மோசடி அறிவிப்பைவெளியிட்ட திமுக மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷ்னருக்கும் புகார் அனுப்பினேன். அவரும் நடவடிக்கைஎடுக்கவில்லை.
எனவே திமுக மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கில் திமுகவையும்பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பாட்சாவுக்கு நீதிபதிகள் கண்டனம்:
இந்த மனு நீதிபதிகள் மிஸ்ரா. ஜோதிமணி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,பாட்சாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:
ஜனநாயக நாட்டில் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை வெளியிடுவது கட்சிகளின் உரிமை. அதில் கோர்ட் தலையிடமுடியாது. நீங்கள் வழக்குப் போட்டதே தவறானது. இதில் மோசடி வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு ஏதும்இல்லை. மேலும் கிரிமினல் வழக்குக்கான முகாந்திரமும் இல்லை.
பாட்சா கொடுத்துள்ள புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கை விவரத்தை 23ம் தேதி போலீசார் தெரிவிக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கையும் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
வரும் 8ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications