சிண்டு முடியும் கருணாநிதி: திருமா. தாக்கு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தலித் மற்றும் முக்குலத்தோர் சமுதாயத்தினரிடையே சிண்டு முடிந்து கலகம் ஏற்படுத்தமுயல்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் அவர் பிரசாரம் செய்து பேசுகையில்,

அதிமுகவை குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சி என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால்தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கொடுத்தவர் ஜெயலலிதா.

ஏழைப் பெண்களுக்கு இலவசமாக அரை பவுன் தாலி வழங்குவதாகஅறிவித்திருப்பதன் மூலம் பாரதியார், பாரதிதாசன், அம்பேத்கர் கண்ட கனவுகளைநிறைவேற்றியுள்ளார் ஜெயலலிதா.

இது மட்டுமா? 10 கிலோ இலவச அரிசி, கல்விக் கூடங்களில் சிறப்பு கட்டணம் ரத்துஎன்று பல்வேறு அருமையான திட்டங்களை அறிவித்துள்ளார். இவற்றைக் கண்டுபயந்து போய் விட்டார் கருணாநிதி.

இதனால்தான் சிறுத்தைகள் நடமாடலாம், சிங்கங்கள் நடமாடக் கூடாதா என்று கேட்டுஇரு சமுதாயத்தினரிடையே சிண்டு டிந்து, கலகம் ஏற்படுத்த முயலுகிறார்.

அவரது இப்பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், மக்களை திசை திருப்பும் வகையில்வைகோ ஜாதி துவேஷத்தில் ஈடுபட்டார். அதனால் 2 தலித்துகள் கொல்லப்பட்டார்கள்என்று பழைய சம்பவத்தில் வைகோவைத் தொடர்புப்படுத்தி பேசி நீலிக் கண்ணீர்வடிக்கிறார்.

தமிழக மக்கள் கருணாநதியின் இந்த திசை திருப்பும் பேச்சைக் கண்டு ஏமாந்து விடமாட்டார்கள் என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+