இலங்கையில் 7 தமிழ் வாலிபர்கள் சுட்டுக் கொலை
கொழும்பு:
யாழ்பாணம் அருகே ஆட்டோக்களில் சென்று கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் மீது இலங்கை ராணுவத்தினர்ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் 7 வாலிபர்கள் பலியாயினர்.
வடமராட்ச்சியில் ராணுவ உளவுப் பிரிவின் முகாமுக்கு அருகே இச் சம்பவம் நடந்தது.கொல்பப்பட்ட வாலிபர்கள் அப்பாவித் தமிழர்கள் என்று தெரிகிறது. ஆனால், அவர்கள் விடுதலைப் புலிகள்என்றும், தங்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்தே பதிலடித் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதாகஇலங்கை ராணுவம் கூறியுள்ளது.
ஆனால், அவர்கள் ஒரு பிறந்த நாள் விழாவில் பங்கேற்கச் சென்ற அப்பாவித் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.கொல்லப்பட்ட வாலிபர்கள் அனைவரும் 17 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந் நிலையில் இன்று வட மேற்குப் பகுதியில் கடற்படைக்கும் புலிகளுக்கும் இடையே இன்று மோதல் வெடித்தது.அதில் புலிகளின் படகு வெடித்துச் சிதறியது. இது தற்கொலைத் தாக்குதல் நடந்த வந்த படகு என கடற்படைக்கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications