புதிய கருத்துக் கணிப்பு- திமுகவுக்கு 194, அதிமுகவுக்கு 38 இடங்கள் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சேர்ந்த குட்வில் கம்யூனிகேச்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் திமுககூட்டணிக்கு 194 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 38 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் 3 கட்டமாக கருத்துக் கணிப்பை நடத்தியது. முதல் கட்ட கருத்துக்கணிப்பில் 37.18 சதவீத ஆதரவு பெற்றிருந்த திமுகவுக்கு இப்போது 47.19 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

இதனால் அந்தக் கூட்டணிக்கு 194 இடங்கள் கிடைக்கும்.

அதே நேரத்தில் முதல் கட்ட கருத்துக் கணிப்பில் 42.95 சதவீத ஆதரவைப் பெற்றிருந்த அதிமுகவுக்கு இப்போது39.07 சதவீத ஆதரவே உள்ளது. இதனால் அந்தக் கூட்டணிக்கு 38 இடங்களே கிடைக்கும்.

ஆண்டிப்பட்டியில் ஒரு மாதத்துக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 62.66 சதவீத ஆதரவு இருந்தது. இப்போதுஅது 43.69 சதவீதமாகக் குறைந்துள்ளது. அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர் சீமானுக்கு 42.27 சதவீத ஆதரவுஉள்ளது. இருவருக்கும் இடையிலான இடைவெளி 1.42 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+