என்னையே இலவசமாக தருகிறேன்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா நாள்தோறும் ஒரு இலவச அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். நான்என்னையே தமிழக மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறேன். என்னை தமிழர்களுக்குஅர்ப்பணிக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் இன்று நடந்த பிரமாண்டபொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார். இக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் விபிசிங்கும் பங்கேற்றார்.

கருணாநிதி பேசுகையில்,

30 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் கட்டிய குடிசை மாற்று வாரியவீடுகள் எல்லாம் இப்போது பெயர்ந்து போய், பொலிவிழந்து போய் பழுதாகிக்கிடக்கின்றன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த வீடுகள் எல்லாம் புதுப்பித்துக்கட்டப்படும்.

அதேபோல கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்னொன்றும் பழுதாகிக் கிடக்கிறது.அதுதான் தமிழகத்தின் ஆட்சி நிர்வாகம். அதையும் நான் சீர் செய்து, புதுப்பித்து,புதுப்பிப்பதோடு மட்டுமல்ல அடியோடு மாற்றி சீர்படுத்த வேண்டிய பணியையும்நான் செய்வேன்.

எனது அரசு மதச்சார்பற்ற அரசாக இருக்கும் என்று நான் உறுதி தருகிறேன் எனவி.பி.சிங் சொன்னார். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். தமிழக மக்களுக்குமட்டுமல்ல, இந்த நாட்டு மக்களுக்கே இதை வாக்குறுதியாக அளிக்கிறேன்.

கடற்கரை சீரணி அரங்கத்தை உடைத்து விட்டார்களே என்று சிங் வருந்தினார். அதைமட்டுமா உடைத்தார்கள். தமிழகத்தின் சீரையே பறித்தவர்கள் அவர்கள். சீரணிஅரங்கம் இருந்தால் பேச்சு சுதந்திரத்தை விரும்புகிறவர்கள் எல்லாம் அங்குவருவார்கள், கூட்டம் போடுவார்கள், பேசுவார்கள். லட்சக்கணக்கில் கூடுவார்கள்.

அப்படிப்பட்ட வாய்ப்பு திமுகவுக்கு, காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு,பாமகவுக்கு உண்டு. நாம்தான் (ஜெயலலிதா) பேசுவதே இல்லையே,எழுதியிருப்பதை, மன்னிக்கவும், எழுதிக் கொடுப்பதை படிப்பவர்களாயிற்றே,எதற்காக சீரணி அரங்கம் என்று கூறி இடித்து விட்டார்கள்.

சீரணி அரங்கத்தை மட்டும் இடிக்கவில்லை சிங் அவர்களே, அருகே இருந்த கண்ணகிசிலையையும் அகற்றி விட்டார்கள். கண்ணகி செய்த குற்றம் என்ன? கற்புக்கரசியாகஇருந்ததுதான்.

இந்த ஆட்சியில் கற்புக்கரசியாக இருக்கலாமா, அப்படிப்பட்ட ஒருவருக்கு சிலைஇருக்கலாமா.? கண்ணகி சிலை அகற்றப்பட்டதால் ரத்தக் கண்ணீர் வடித்த தமிழ்நெஞ்சங்களே கவலைப்படாதீர்கள், மீண்டும் கண்ணகி வருவாள். இதையும்உறுதிமொழியாக தெரிவிக்கிறேன்.

திரைப்பட நகர் ஒன்றுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்ற விவதாம் வந்தபோது தமிழ்சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்ந்த எனது நண்பர் எம்.ஜி.ஆரின் பெயரைநான் சூட்டினேன். அதையும் என்ன செய்வது என்று யோசித்தார்கள். ஆனால் அதைஅகற்றவும் முடியாது, இடிக்கவும் முடியாது. ஆனால் ஒழிப்பதிலே வெற்றி பெற்றுவிட்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அதை அழிய விட்டு, செல்லரிப்பதைப் போல அரித்து,பாழாக விட்டு, எப்படி ராமவரம் தோட்டம் பாழாகிக் கிடக்கிறதோ, அதேபோலதிரைப்பட நகரத்தையும் தானாக அழிய விட்டு இன்று பூட்டிப் போட்டு விட்டார்கள்.

எம்.ஜி.ஆர். எப்போது ஜெயலலிதாவுக்குத் தேவைப்படுகிறார்? தேர்தல் நேரங்களில்மட்டும்தான். மற்ற நேரங்களில் நன்றி காட்டியதுண்டா? ராஜீவ் காந்திக்கு அன்றைக்குஎன்ன எழுதினார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் என் மீது பொறாமைப்படுகிறார், அவரது உடல் நலம் வேறு சரியில்லை.எனக்கு செல்வாக்கு வளர்வது கண்டு ஆத்திரப்படுகிறார். எனவே அவரை மாற்றிவிட்டு என்னை முதல்வராக நியமியுங்கள். கடிதம் இருக்கிறதா, இல்லையா? மக்கள்குரல் நாளேடு இதை பிரசுரித்ததா, இல்லையா?

இன்று நான் பிரசாரத்திற்குக் கிளம்பும்போது பத்திரிக்கையாளர்கள் என்னைசூழ்ந்துகொண்டு ஜெயலலிதா தினசரி ஒரு இலவசத்தை அறிவிக்கிறாரே, என்னசெய்யப் போகிறீர்கள் என்று கேட்டனர். நான் சொன்னேன், என்னிடம் இதற்கு மேல்எதுவும் இல்லை, அதனால் என்னையே இலவசமாக கொடுக்கப் போகிறேன்.தமிழர்களுக்காக, தமிழகத்திற்காக என்னையே அர்ப்பணிக்கிறேன், என்னையேஅவர்களுக்கு கொடுக்கிறேன்.

இதில் என்னுடன் ஜெயலலிதா போட்டியிட முடியாது என்றேன்.

எனவே, என் அருமைத் தமிழனே இனியாவது விழித்துக் கொள், ஏமாந்தது போதும்என்றார் கருணாநிதி.

கருணாநிதியால் பிரமித்தேன்-சிங்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பேசுகையில்,

என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர் கருணாநிதி.அதற்காக நான் பெருமை அடைகிறேன்.

சமூக நீதியின் பால் அவர் காட்டிய அக்கறையை நினைத்து நான் பிரமித்துப்போனேன். அதனால் அவர் பதவியை இழந்தாலும் கவலைப்படாதவர்.

பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட நலிவடைந்த சமுதாயத்தினர் மீது பெரும்அக்கறை காட்டுபவர் கருணாநிதி.

மற்றவர்கள் போல நினைத்த பாதையில் செல்பவர் அல்ல கருணாநிதி. ஒரேபாதையில்தான் அவர் எப்போதும் நடைபோடுவார். அந்தப் பாதை, தமிழகத்தின்வளர்ச்சிக்காக, நலனுக்காக, உயர்வுக்காக மட்டுமே இருக்கும்.

வரும் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான ஜனநிாயக முற்போக்குக் கூட்டணிமிகப் பெரும் வெற்றியைப் பெறுவது நிச்சயம். அடுத்த முதல்வராக கருணாநதிமீண்டும் பதவியில் அமருவதும் நிச்சயம் என்றார் வி.பி.சிங்.

இக் கூட்டத்தில் நடிகரும், விபி சிங்கின் ஜன் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ராஜ்பாப்பர், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் இயக்கங்கள் ஆதரவு:

இதற்கிடையே சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைத்துதமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

அனைத்துத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சென்னையில் நடந்தது.இக்கூட்டத்தில் வா.மு.சேதுராமன், வல்லிக்கண்ணன், முகம் மாமணி, பொன்.செல்வகணபதி, முன்னாள் மேயர் சா.கணேசன், புலவர் அறிவுடைய நம்பி உள்ளிட்டபல தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் பண்பாட்டுக்கும், மொழிக்கும் எதிராக செயல்பட்டு வரும் அதிமுகவைக்கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடியதுதிமுகதான். எனவே வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடற்கரையில் கண்ணகி சிலையை மீண்டும் நிறுவவேண்டும். சீரணி அரங்கை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியைசந்தித்து நேரிலும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+