தமிழனை கேவலப்படுத்திய விஜயகாந்த்-தங்கர்

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:

வட நாட்டு நடிகையிடம் (குஷ்பு) ஒரு தமிழனை மன்னிப்பு கேட்க வைத்தவிஜயகாந்துத்துக்கு தமிழகத்தை ஆளும் தகுதி இல்லை என்று இயக்குனர்தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த்துக்கு எதிராக விருத்தாச்சலம் தொகுதியில் தங்கர்பச்சான் தீவிரப்பிரசாரம் செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ் கலாச்சாரத்தை குறைவாகவும், இழிவாகவும் மதிப்பிட்டு தனது கருத்தைவெளிப்படுத்திய வட நாட்டு நடிகை விவகாரத்தில் சர்ச்சை எழுந்தபோது, தமிழ்பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் கலாச்சாரத்தைஇழிவுபடுத்துபவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தேன்.

அதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் செய்த விஜயகாந்த் இன்று நாடாளும் ஆசையில்ஊர் ஊராக சுற்றி வருகிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு அந்தத் தகுதி இல்லை.

வட நாட்டு நடிகையிடம் ஒரு தமிழனை மன்னிப்பு கேட்கச் செய்த விஜயகாந்த்துக்குதமிழர்கள் சரியான பதிலடியை தருவார்கள்.

கேரளாவில் நடிகர் மம்மூட்டி தனது மொழி வளர சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுநடிக்கிறார். ஆனால் விஜயகாந்த் பணத்துக்காக எதையும் செய்வார். அவருக்கு தமிழ்மீதோ, தமிழர்கள் மீதோ எந்தப் பாசம் கிடையாது.

தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இருப்பவன் என்பதால் விருத்தாச்சலம் தொகுதியில்போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்தும், அதேபோல மங்களூர் தொகுதியில்போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்தும் பிரசாரம்செய்கிறேன்.

தமிழ் உணர்வு உள்ள அனைவரும் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டியதுஅவசியம். விஜயகாந்த் போன்ற வந்தேறிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்என்றார் தங்கர்.

பின்னர் மங்களூர் தொகுதியில் பிரசாரம் செய்து அவர் பேசுகையில், இப்போதைக்குடாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் பிரிந்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல்முடிந்தவுடன் அவர்களது நட்பு தொடரும்.

அவர்களை இணைத்து வைப்பது தமிழ்தான். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரேஇயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். அவர்களுக்குப் போடாத ஓட்டுக்கள்செல்லாத ஓட்டுக்களுக்குச் சமம்.

கருப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர். என்று பல டூப்ளிக்கேட்டுகள் இங்கே உலவிக்கொண்டுள்ளனர். அரசியலை வியாபாராமாக்கி விட்டார் விஜயகாந்த். அவர்களைப்போன்றவர்களை நம்பி இளைஞர்கள் ஏமாந்து விடக் கூடாது

என்றார் தங்கர்பச்சான்.

தீவிர தலித் விடுதலை சிந்தனையாளரான தங்கர்பச்சான் வன்னிய சமூகத்தைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+