சன் டிவி-ரூ1 கோடி நஷ்டஈடு கேட்கும் சிவனாண்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உளவுப் பிரிவு டிஐஜியாக இருந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகதூக்கப்பட்ட சிவனாண்டி ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு சன் டிவிக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.

தனது ஐ.பி.எஸ். பதவி பறிக்கப்பட்டதாக அவதூறான செய்தியை பரப்பியதாக சன்டிவிக்கு அவர் இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த டிஐஜி சிவனாண்டி உளவுப் பிரிவுதலைவர் பதவியிலிருந்து தேர்தல் ஆணையத்தால் தூக்கப்பட்டார்.

இந் நிலையில் சன் டிவி நிறுவனத்திற்கு தனது வழக்கறிஞர் அறிவழகன் மூலம்நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார் சிவனாண்டி.

அதில், டிஐஜி சிவனாண்டி, வேறு ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை விட பணியில்மூத்தவர் என்ற அடிப்படையில், மத்திய அரசின் போலீஸ் அதிகாரிகளுக்கான பணிபட்டியலில் குறிப்பிட்டது தவறு என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமைதீர்ப்பு வழங்கியது.

ஆனால் டிஐஜி சிவனாண்டியின் பதவி ரத்து செய்யப்பட்டு விட்டதாக சன் டிவியில்செய்தி ஒளிபரப்பானது.

சிவனாண்டியின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், தவறான செய்தியைஒளிபரப்பிய சன் டிவி, 15 நாட்களுக்குள் ரூ. 1 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும்என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+