வாக்கு பதிவு கலாட்டா-சுட்டார் சிஐஎஎஸ்ப் வீரர்
விழுப்புரம்:
விழுப்பும் அருகே வாக்குச் சாவடியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க வானத்தை நோக்கி சுட்டார்மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்.
சின்ன சேலம் புக்கரவாரி கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது. அங்கு வாக்களிக்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார் மத்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்.அப்போது அவருக்கும் அங்கு வாக்களிக்க வந்த ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்துஅவர் ஊருக்குள் சென்று சுமார் 50 பேரைத் திரட்டிக் கொண்டு வாக்குச் சாவடிக்கு வந்தார்.
அந்தக் கும்பல் அந்த வீரரை தாக்க முயன்றது. இதைத் தொடர்ந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வானத்தைநோக்கி சுட்டார் வீரர்.
இதையடுத்து அந்த 50 பேரும் சிதறியடித்து ஓடினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அருகில் ரோந்துப் பணியில்இருந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஓட்டுப் பதிவு பாதிக்கப்படவில்லை.
குவாட்டர் குடுத்த திமுக பெண்கள்:
இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் போட்டியிடும் துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மது பாட்டில்களைக் கொடுத்து வாக்குசேகரித்ததாக திமுகவைச் சேர்ந்த 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
துறைமுகம் தொகுதிக்குட்பட்டது எஸ்.எம்.நகர். இப்பகுதியில் இரண்டு பெண்கள் மது பாட்டில்களைக் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது விஜய ராணி மற்றும் ராணி என்ற இரு பெண்கள் வாக்காளர்களுக்கு மது பாட்டில்களை வழங்கி ஓட்டுக் கேட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும், அன்பழகனுக்காக இப்படி வாக்கு சேகரித்ததாகவும் தெரிய வந்தது.
இவர்களின் வீடுகளில் சோதனை போட்ட போலீஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 பாட்டில்களை (அத்தனையும் குவார்ட்டர்!) கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications