அதிமுக தொண்டருக்கு அடி, உதை
தேனி:
சேலத்தில் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமியின் காரை திமுகவினர்முற்றுகையிட்டனர்.
வீரபாண்டி அருகே தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்ற விஜயலட்சுமியை 200 பேர்கொண்ட திமுகவினர் முற்றுகையிட்டனர்.இதையடுத்து திமுகவினருக்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இரு தரப்பும் அடித்துக் கொள்ளும் சூழல் உருவானதையடுத்து போலீசார் விரைந்துவந்து இரு தரப்பினரையும் கலைந்து போக வைத்தனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜயலட்சுமி பழனிசாமி, திமுகவினர் தன்னைகெல்ல திமுகவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக புகார் தெரிவித்தார்.
அதிமுக மீது இ.கம்யூ தாக்குதல்:
இதற்கிடையே உடுமலைத் தொகுதியில் அதிமுக தொண்டரை இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் தாக்கினர்.
நாட்ராயன் என்பவர் சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகிஅதிமுகவில் இணைந்தார்.
இந் நிலையில் இன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த நாட்ராயணை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதில் படுகாயமடைந்தநாட்ராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications