கடலில் மூழ்கிய சேது சமுத்திரத் திட்ட கப்பல்
சென்னை:
சேது சமுத்திரம் திட்ட ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள கப்பல் வெடி விபத்தில் சிக்கிகடலில் மூழ்கியது. அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான கடல் அகழ்வுப் பணி தீவிரமாக நடந்துவருகிறது. மேலும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏதும் உள்ளதா என்ற ஆய்வுப் பணியும்மறுபக்கம் நடந்து வருகிறது.இதற்காக இந்திய கடல் அகழ்வுக் கழகத்திற்குச் சொந்தமான கப்பல் இப்பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இக்கப்பலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அடங்கிய குழு 24மணி நேரமும் இருந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை கோடியக்கரையில் இருந்து 40 கடல்மைல் தொலைவில்கப்பல் நிலை கொண்டிருந்தது. கப்பலில் 18 பேர் இருந்தனர்.
அப்போது திடீரென வெடிச் சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து கப்பல் கடலில்மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து அருகில் நின்று கொண்டிருந்த படகுகளில்குதித்து 18 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கப்பல் சிறிது சிறிதாக கடலில் மூழ்கி விட்டது. ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தகப்பல் வெடி விபத்தில் சிக்கி மூழ்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இதனால் சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணிகளில் பாதிப்புஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications