காங்கிரஸ் பிரியாணி-100 பேருக்கு வாந்தி, பேதி
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஹாரூண் வழங்கியமுட்டை பிரியாணியைச் சாப்பிட்ட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிதேர்தல் ஏஜென்டுகள் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 100 பேருக்கு வாந்தி,பேதி, மயக்கம் ஏற்பட்டது.
தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமார் சார்பில்பணியாற்றிய தேர்தல் ஏஜென்டுகளுக்கு பெரியகுளம் எம்.பி. ஹாரூண்அலுவலகத்தில் வைத்துத் தயாரிக்கப்பட்ட முட்டை பிரியாணி பார்சல்களாகவழங்கப்பட்டது.இவற்றை பெற்றுக் கொண்ட ஏஜென்டுகள் தங்களது வீடுகளுக்கு பிரியாணிபொட்டலங்களை எடுத்துச் சென்று சாப்பிட்டனர். சாப்பிட்ட சில நிமிடங்களில்அனைவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு 100க்கும் மேற்பட்டோர் கொண்டு செல்லப்பட்டுஅனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications