11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை-பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாளை மறுதினம் (11ம் தேதி) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையையொட்டிதமிழகம் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 11ம் தேதி வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.பிற்பகலுக்குள் 234 தொகுதிகளுக்கான முடிவுகளும் தெரிந்துவிடும்.தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும்பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறைகளின் முன் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இரவு பகலாக பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் 8 இடங்களில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அவை, ராணி மேரிக்கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி,வேலம்மாள் பள்ளி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி,ஸ்ரீராம் பாலிடெக்னிக் ஆகியவை.












Click it and Unblock the Notifications