மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தற்போது மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ள மாவட்டங்களின் வாக்குப் பதிவு விவரம்:

பெரம்பலூர் - 72.7%

திருவாரூர் - 76 %

நாகை - 75.4 %

கடலூர் - 75 %

சேலம் - 74 %

ஈரோடு - 74 %

தஞ்சை - 74.56 %

மதுரை - 71 %

வேலூர் - 71 %

திருச்சி - 70 %

நாமக்கல் - 70 %

நெல்லை - 68.62 %

கன்னியாகுமரி - 67.3 %

85%க்கும் மேல் இருந்தால் ஆய்வு

இந் நிலையில் 85 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகளில்ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மிக அதிக அளவில் வாக்குகள் பதிவானால் அந்த வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல்நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாஅறிவித்திருந்தார்.

இந் நிலையில் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி 85 சதவீதத்திற்கும் மேல் பதிவானவாக்குகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள், ஓட்டளித்தவர்கள்,அவர்கள் தாக்கல் செய்த புகைப்பட சான்று உள்ளிட்டவை குறித்து ஆராயப்படும்.மேலும் அந்த வாக்குச் சாவடியில் முறைகேடு ஏதும் நடந்தா என்றும் விசாரிக்கப்படும்.

ஏதாவது தவறு நடந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்தால்,

தேவைப்பட்டால் இந்த வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்படும் எனத்தெரிகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 174 வாக்குச் சாவடிகளில் இதுபோன்றஆய்வு நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+