திமுக செயலாளர் அதிமுகவினரால் படுகொலை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மொரப்பூர் சென்னம்பட்டிச்ை சேர்ந்த ராஜேந்திரன் (45), அங்குள்ள வாக்குச் சாவடியில் திமுக ஏஜென்டாகஇருந்தார். அப்போது அவருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவரை அதிமுகவினர் தாக்கினர். அது குறித்து போலீசில் புகார் கொடுத்தார் ராஜேந்திரன். ஆனால் அதைபோலீசார் வாங்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து தனது தொகுதியின் வேட்பாளரான முன்னாள் அஐமச்சர் முல்லைவேந்தனுக்கு தகவல் தந்தார்.அவர் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சாவடிக்கு வந்தார்.

அப்போது அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுகவினர் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதில் முல்லைவேந்தனின் கார் உடைந்தது. போலீசார் தலையிட்டு முல்லை வேந்தனை திருப்பி அனுப்பினர்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் ராஜேந்திரனை அதிமுகவினர் பயங்கர ஆயுதங்கால் தாக்கினர். தலையில்அரிவாளால் வெட்டினர். இதையடுத்து மயங்கி சரிந்த அவர் அந்த இடத்திலேயே பலியானார்.

இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நிலைமையக் கட்டுப்படுத்த ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிமுகவினர் மீது தாக்குதல்:இந் நிலையில் நெல்லிக்குப்பம் அருகே நத்தம் கிராமத்தில் அதிமுகவினர் மீது நள்ளிரவில் திமுகவினர் தாக்குதல்நடத்தினர்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை காரில் வந்த திமுகவினர் அரிவாள்களால்தாக்கினர். இதில் 5 பேருக்கு வெட்டு விழுந்தது. இதில் இருவருக்கு விரல்கள் துண்டாயின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+