மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை:
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மீனாட்சிதிருக்கல்யாணம் படு விமரிசையாக நடந்தேறியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றுகாலை நடந்தது.ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருமணம் நடந்தது.மீனாட்சியாக வேடம் புணைந்த சிவாச்சாரியாரும், சுந்தரேஸ்வரராக வேடம் புணைந்தசிவாச்சாரியாரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாணும், சுந்தேரஸ்வரருக்கு பட்டு வேட்டியும்அணிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மண மேடையை இருசிவாச்சாரியார்களும் வலம் வந்தனர். இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
அழகர் கோவிலில்..
இதற்கிடையே அழகர்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழாதொடங்குகிறது. நாளை கோவிலில் இருந்து சுவாமி கள்ளழகர் திருக்கோலம் பூண்டுமதுரை நோக்கி புறப்படுகிறார். இரவு கள்ளந்திரியில் தங்குகிறார்.
தொடர்ந்து அங்கிருந்து தங்க ரதத்தில் மதுரை நோக்கி வரும் கள்ளழகர் 12ம் தேதிஇரவு மூன்று மாவடி வருகிறார். அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சிநடைபெறுகிறது.
ஆற்றில் இறங்குகிறார்:
13ம் தேதி காலை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கிபக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.












Click it and Unblock the Notifications