அமைச்சர் வீட்டில் பாமகவினர் பயங்கர தாக்குதல்அதிமுக தொண்டர் கொலை-ராமதாஸ் மீது வழக்கு
திண்டிவனம்:
தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த பாமகவினர் பயங்கரதாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் சண்முகம் காயமின்றித் தப்பிவிட்டார்.ஆனால் அதிமுக தொண்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது பாமகவைச்சேர்ந்த ஒரு குழுவினர் அதிமுகவினரை குறி வைத்து தாக்குதலை தொடங்கினர்.சில அதிமுகவினரின் வீடுகளுக்குச் சென்ற இக்கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது,பொருட்களையும் சூறையாடிச் சென்றது.
இதை அறிந்த அமைச்சர் சி.வி.சண்முகம் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்தெரிவித்தார். பின்னர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பெரியய்யாவிடம்புகார் செய்து விட்டு வீடு திரும்பினார்.
இரவில் தனது வீட்டில் கட்சியினர் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்சண்முகம். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது.
வீட்டுக்குள் புகுந்த அக்கும்பல் பெரும் தாக்குதலில் ஈடுபட்டது. கண்ணில் பட்டபொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியது. அமைச்சரையும் அரிவாளால் வெட்டமுயன்றனர்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அமைச்சரை அங்கிருந்து காப்பாற்றிவெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏற்றிக் கொண்டு பறந்தனர்.இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.
ஆனால், இந்த கொலை வெறித் தாக்குதலில் அமைச்சரின் வீட்டிலிருந்த முருகானந்தம்என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அமைச்சர் வீட்டுக்குள்ளேயே நடந்த இந்த கொலை வெறித் தாக்குதலால்திண்டிவனத்தில் பதட்டம் நிலவுகிறது.
வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. ஜாங்கிட் விரைந்து வந்து விசாரணைமேற்கொண்டார். திண்டிவனத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கவும் அவர்உத்தரவிட்டார்.
இந்தக் கொலை தொடர்பாத குமரன் (28) என்பவரைப் பிடித்து அதிமுகவினர்போலீசில் ஒப்படைத்தனர். இவர் பாமக தொண்டராாவர்.
ராமதாஸ், மகன், மருமகன் மீது வழக்கு:
இதற்கிடையே இச் சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும்,மத்திய அமைச்சருமான அன்புமணி, மருமகன் பரசுராமன் ஆகியோர் மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் திண்டிவனம் தொகுதி பாமக வேட்பாளர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இதற்கிடையே சண்முகம் மீதான தாக்குதலைக் கண்டித்து திண்டிவனத்தில்அதிமுகவினரின் மிரட்டலின்பேரில் கடையடைப்பு நடந்து வருகிறது.
பாமகவுக்கு ஜெ. கண்டனம்
அதிமுக தொண்டர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல்தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, பாமகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டிவனத்தில் உள்ள அமைச்சர்சி.வி.சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்து பாமகவினர் நடத்திய கொலை வெறித்தாக்குதலில் அதிமுக தொண்டர் முருகானந்தம் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்ததும் ஆட்கொணாத் துயரம், வேதனையும்அடைந்தேன்.
சட்டசபைத் தேர்தலில் அதிக மாபெரும் வெற்றி பெறும் என்பதை அறிந்து தாங்கமுடியாத பாமகவினர் கண்மூடித்தனமாக, கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதுகடுமையாக கண்டிக்கத்தக்கது.
கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட பாமகவினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
வன்முறையையே வழக்கமாகக் கொண்ட பாமகவினர் அதிமுக மீது தாக்குதல்நடத்துவது புதிதல்ல என்றாலும், இப்படிப்பட்ட கொடூரத் தாக்குதலைநடத்தியவர்களை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் மன்னிக்க மாட்டார்கள்.
முருகானந்தத்தை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றுதெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
ஜெ. மீது ராமதாஸ் புகார்:
இந் நிலையில், தேர்தல் தோல்வி விரக்தி காரணமாக எதிர்க் கட்சிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க ஜெயலலிதாமுயல்வதா ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications