வாக்களிக்க முடியாமல் திரும்பி ரஜினி மகள்
சென்னை:
82 வயதிலும் வீல்சேரில் வாக்களிக்க வந்த மூதாட்டியின் பெயர் வாக்காளர்பட்டியலில் இல்லாததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பிச் சென்றார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்டவர் 82 வயது சின்னம்மாள். நடக்கமுடியாத, தள்ளாடும் வயதில் இருக்கும் சின்னம்மாள் நேற்று ஓட்டுப் போடுவதற்காகவீல் சேரில் கிளம்பினார். அவருக்கு உதவியாக இரு உறவினர்களும் வந்தனர்.முதல்வர் ஜெயலலிதா ஓட்டுப் போட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்குச் சென்ற சின்னம்மாளுக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அவரது பெயர்வாக்காளர் பட்டியலில் இல்லை என்று வாக்குச் சாவடியில் கூறியதால் அவர்ஏமாற்றமடைந்தார்.
இத்தனைக்கும் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனாலும், பெயர்பட்டியலில் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.
வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமத்துடன் வந்து வாக்களிக்க முடியாமல்போயிற்றே என்று அவர் புலம்பிக் கொண்டே சென்றார்.
இதே வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த ரஜினி குடும்பத்தினரின் ஐஸ்வர்யாவின்பெயர் பட்டியலில் இல்லை. இதனால் ரஜினி, அவரது மனைவி லதா, மகள்செளந்தர்யா மட்டுமே வாக்களித்தனர். ஐஸ்வர்யா வாக்களிக்காமல் திரும்பினார்.
தாம்பரம் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்நடந்தது. முதியவர் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி வாக்கு சாவடிக்கு சென்றார். புகைப்படஅடையாள அட்டையைக் காட்டிய அவர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இருந்தஇடத்திற்குச் சென்றார்.
அங்கு போன அவர் சில நொடிகள் கழித்து, இதில் இரட்டை இலை சின்னத்தைக்காணவில்லையே என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார். உடனே, மதிமுக பூத்ஏஜென்டு அவரிடம், இரட்டை இலைக்குப் பதில்தான் பம்பரச் சின்னம்போட்டியிடுகிறது. அதற்குப் போடுங்கள் என்றார்.
ஆனால் அந்த முதியவரோ, அது எப்படிப்பா, இத்தனை காலமாக இரட்டைஇலைக்குதான் போடுகிறேன், இப்போது மாற்றச் சொல்கிறாயே என்று கோபமாக கூறிவிட்டு வாக்களிக்காமல் திரும்பிச் சென்று விட்டார்.
ஆனால், மதிமுக பூத் ஏஜென்ட் விடவில்லை. அந்த முதியவரின் பின்னாலேயேபோய் பலமுறை சமாதானப்படுத்தியும் அந்த தாத்தா மசியாமல் டாடா காட்டி விட்டுச்சென்று விட்டார்.
நொந்து போய் திரும்பினார் பம்பர ஏஜெண்ட். அவரைப் பார்த்து மற்ற ஏஜென்டுகள்சிரித்து கிண்டலடித்தனர்.












Click it and Unblock the Notifications