ஜெயேந்திரர் மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்
டெல்லி:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையை தமிழத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.சங்கர மட பக்தர் ராதாகிருஷ்ணனை தாக்கிய வழக்கில் ஜெயேந்திரரையும் முக்கிய குற்றவாளியாக சேர்த்ததுதமிழக அரசு. அவர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தால் நியாயம் கிடைக்காது என்று கூரி அதை வேறு மாநிலத்துக்குமாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ஜெயேந்திரர்.
இந்த வழக்கை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, நீதிபதி தருண் சாட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்துவந்தது.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்குவிசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிவித்தார். அவர் விரைவில் ஓய்வு பெறஉள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்கப்பட்டுராதாகிருஷ்ண் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications