திமுக அணிக்கு 150- டைம்ஸ் நவ் டிவி
சென்னை:
நேற்று நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் இறுதியில், ஓட்டுப் போட்டு விட்டுத்திரும்பிய வாக்காளர்களிடம் டைம்ஸ் நவ் டிவி-ஹன்சா நிறுவனம் ஆகியவைஇணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை அத் தொலைக்காட்சிவெளியிட்டுள்ளது.
அதன்படி திமுக கூட்டணிக்கு இத்தேர்தலில் 150 தொகுதிகள் வரை கிடைக்கும்.அதிமுக கூட்டணிக்கு 81 தொகுதிகளும், மற்றவர்கள் 3 இடங்களில் வெல்வார்கள்எனத் தெரிய வந்துள்ளது.திமுக வுக்கு 47.90 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 38.20 சதவீத வாக்குகளும்கிடைக்கக் கூடும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்றதை (51.60) விட 13.4 சதவீதவாக்குகளை அதிமுக இழக்கிறது.
திமுகவுக்கு கடந்த தேர்தலை விட (43.60) இம்முறை கூடுதலாக 4.3 சதவீத வாக்குகள்கிடைக்கும்.
ஸ்டார் நியூஸ், டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் ஐபின் தொலைக்காட்சிகள்வெளியிடுட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளைப் பார்க்கும்போது திமுக அணிக்குபெரும்பான்மை பலம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
கூட்டணி ஆட்சி?:
அதேசமயம் திமுகவுக்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மைகிடைப்பது சந்தேகம் என்று ஸ்டார் நியூஸ் தவிர மற்ற இரு சானல்களும்தெரிவித்துள்ளன. எனவே தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புஅதிகரித்துள்ளது.
எக்ஸிட் போலை நம்பலாமா?
கடந்த 2001ம் ஆண்டு நிடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடத்தப்பட்ட எக்ஸிட்போல் முடிவில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்றுதெரிவிக்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு. அதிமுக மிருக பலத்துடன் ஆட்சிப் பொறுப்பில்அமர்ந்தது. இதைப் பார்த்து இந்தியாவே குழம்பிப் போனது.
தமிழக வாக்காளர்களின் இந்தப் போக்கினால் அதிர்ச்சி அடைந்த என்டிடிவி இம்முறைஎக்ஸிட் போலே நடத்தவில்லை.
எனவே 11ம் தேதி நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகுதான்உண்மையிலேயே அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தெளிவாகதெரிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications