திமுகவுக்கு ஆதரவு: ஆளுனரிடம் கம்யூ கடிதம்
சென்னை:
திமுக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மார்க்சிஸ்ட் மற்றும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுனர் பர்னாலாவிடம் கடிதம் கொடுத்துள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக கூட்டணிஆட்சி அமையவுள்ளது. சிறுபான்மை பலம் கொண்ட திமுக ஆட்சி அமைக்கதோழமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இதில் பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் ஆகியவை வெளியிலிருந்துஆதரவு தருவதாக அறிவித்துள்ளன.
இந் நிலையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக ஆட்சிக்கு ஆதரவு தருவதாகஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க திமுகவுக்கு ஆதரவு அளிப்பதென கட்சியின்மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஆளுனருக்கும் கடிதம் மூலம்தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் அமையும் ஆட்சிக்கு தமிழக மக்கள் தங்கள்ஆதரவைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும். திமுக தலைமையிலான ஆட்சிக்குஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையறறஆதரவு வழங்குகிறது.
இதுதொடர்பாக ஆளுனருக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
அதே போல பாமகவும் தனது ஆதரவுக் கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications