அதிமுக தோல்விக்கு காரணமான விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் திமுக கூட்டணி வென்றுள்ள 43 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு விஜய்காந்த்தின் கட்சிகாரணமாக இருந்துள்ளது. அதே போல வட மாவட்டங்களில் பாமகவின் தோல்விக்கும் விஜய்காந்த் கட்சிமுக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த 43 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்குகளோடு விஜய்காந்த் கட்சி பெற்றவாக்குகளைச் சேர்த்தால் திமுக கூட்டணிக் கட்சியினரை விட அதிக வாக்குகள் வருகின்றன.

இதனால் அதிமுக கூட்டணியில் விஜய்காந்த் இடம் பெற்றிருந்தால் அக் கூட்டணியே வென்றிருக்கும் என்றுகருதப்படுகிறது.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குதிராவிட கழகம் அனைத்துக் கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் எட்டுசதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று பெரும் நெருக்கடியைக்கொடுத்துள்ளது.

குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் படிக்காதவர்கள் மத்தியிலும் விஜய்காந்துக்கு நிறையஆதரவு கிடைத்துள்ளது. திமுகவை விட அதிமுகவின் வாக்கு வங்கியில் தான்விஜய்காந்தால் அதிக அரிப்பு ஏற்பட்டுள்ளது.

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார்.

தமிழகத்தில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி ஏற்பட விஜயகாந்த்தின் புதுக்கட்சிதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் நல்லவாக்குகளைப் பெற்றுள்ள விஜயகாந்த்தின் கட்சி தாம்பரம் தொகுதியில் 41,000வாக்குகளுக்கு மேல் பெற்று முக்கிய அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சிவைத்தியம் அளித்துள்ளது.

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. விஜயகாந்த்,

13 மாவட்டங்களிலிருந்து எனக்கு வந்துள்ள தகவல்களின்படி மொத்தம் 20 லட்சம்வாக்குகள் எங்களது கட்சிக்குக் கிடைத்துள்ளது. மற்ற மாவட்டங்களிலிருந்தும்தகவல்களை எதிர்பார்த்துள்ளேன்.

இவ்வளவு வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளதே பெரிய வெற்றிதான். 5 முதல் 10இடங்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் மாநிலத்தில் கூட்டாட்சி என்ற நிலையை எங்களது கட்சி ஏற்படுத்தியுள்ளது.அதிமுக தோல்விக்கு நாங்கள்தான் காரணமா என்பதை நான் கூற முடியாது. மக்கள்தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பார்கள்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்துவருகின்றன. அந்த வகையில் இப்போது மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துவாக்களித்துள்ளார்கள்.

நான் சட்டசபைக்கு தவறாமல் செல்லுவேன். மக்கள் பிரச்சினைகளுக்காக குரல்கொடுப்பேன். ஒரு கை ஓசை எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியாது.இருந்தாலும் நான் தனித்தே செயல்படுவேன், தேவைப்பட்டால் போராடுவேன்.

இத்தனை ஓட்டுக்களை தேமுதிக வாங்கியுள்ள நிலையில் நான் அரசியலிலிருந்துவிலக வேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் நான் அரசியலிலிருந்து விலகமாட்டேன்.

தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுவேன். அதேசமயம் நடிப்பையும் கைவிட மாட்டேன்.

விருத்தாச்சலம் தொகுதி பாமக கோட்டை என்பதெல்லாம் சும்மா பேச்சு. அப்படிப்பார்த்தால் திமுக கோட்டை என்று கூறப்பட்ட சென்னையில் 7 தொகுதிகளை அதிமுகவென்றுள்ளதே? இது எப்படி சாத்தியமாயிற்று.

விருத்தாசலம் தொகுதியில் கல்லூரி, தொழிற்சாலை அமைக்க நடவடிக்கைஎடுப்பேன்.

இரு அணிகளும் என்னை கூட்டணியில் சேர அழைத்தன. நான்தான் வேண்டாம்என்று கூறி விட்டேன். யாருடைய ஆதரவும் இன்றி, மக்களை மட்டுமே நம்பிதேர்தலை சந்தித்த எங்களுக்கு இத்தனை ஓட்டுக்களை அளித்துள்ள மக்களுக்கு எனதுகோடானு கோடி நன்றிகளை கூறிக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+