தமிழ்நாட்டுக்கு நேரம் சரியில்லை.. சட்டசபைக்கு போக மாட்டேன்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நான் சட்டசபைக்கு செல்வதை அதிமுகவினர் விரும்பவில்லை. போக வேண்டாம்என்று கேட்டுக் கொண்டுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

அதன் விவரம்:

இதன் மூலம் கடந்த முறை கருணாநிதி சட்டசபைக்கு செல்லாமல் இருந்தது போலஜெயலலிதாவும் சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார் என்றுதெரிகிறது.

ஆனால், கருணாநிதி கூட்டங்களுக்கு வராததை கூட்டத்துக்குக் கூட்டம் விமர்சித்தவர்ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தஜெயலலிதா நிருபர்களை சந்தித்தார். சோகமாகவும் கோபமாகவும் காணப்பட்டஜெயலிலதா, சில கேள்விகளுக்கு கோபக் கனல் தெறிக்க பதில் தந்தார்.

ஜெயலலிதா கூறியதாவது:

நான் சட்டசபைக்கு செல்வேனா என்று எல்லோரும் கேட்கிறார்கள், போக வேண்டும்என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில்நான் திமுகவினரால் தாக்கப்பட்டதை யாரும் மறக்கவில்லை, மறந்திருக்கவும்முடியாது.

அன்று யாரெல்லாம் என்னைத் தாக்கினார்களோ, அவமானப்படுத்தினார்களோஅவர்கள் எல்லாம் இன்று மீண்டும் அமைச்சர்களாக வந்திருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியாக அரசு அமைக்கப்போகிற இவர்கள், அடிப்படை பண்பு, நாகரீகம்தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல். (இதை ஜெயா சொல்வது தான் வேடிக்கை)

எனவே, என்னுடைய கட்சிக்காரர்கள், என்னுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், இந்தகாட்டுமிராண்டிக் கும்பல் நடுவே நான் வருவது சரியாக இருக்காது என்றுஎண்ணினார்கள். அவர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனை கூறவும் நான்இருக்கிறேன்.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக நாங்கள் மிகவும் கண்ணியமான முறையில் ஆட்சியைநடத்தினோம், சட்டசபையை நடத்தினோம்.

1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, திமுக ஆட்சியில்இருந்தபோது, கேவலமான, வன்முறை வெறியாட்டங்களைப் போல என்னுடையஆட்சியில் நடைபெற்றதில்லை.

1991-96 வரையிலும், பின்னர் 2001 முதல் 2006 வரையிலும் நான் முதல்வராகஇருந்தபோதும் கண்ணியமான முறையில் ஆட்சியையும், சட்டசபையையும்நடத்தினோம். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுக உறுப்பினர்கள்கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார்கள், அநாகரீகமாக பேசினார்கள், மோசமானவார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார்கள்.

அடிப்படை கண்ணியத்தை, அடிப்படை நாகரீகத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.

நான் முதல்வராக இருந்தபோதே அப்படி நடந்து கொண்டவர்கள், இப்போது எப்படிநடப்பார்கள் என்பதை 89லியே பார்த்து விட்டோம். இப்போது அதே முதல்வர், அதேஅமைச்சர்கள். எனவேதான் எங்கள் அம்மா அங்கு வருவது சரியாக இருக்காது என்றுஅதிமுக உறுப்பினர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். பார்க்கலாம், அவசியம்ஏற்பட்டால் வந்தாலும் வருவேன்.

கடந்து ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் பொற்கால ஆட்சியை நாங்கள்கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் கிடையாது. யாரும்குறை சொல்லவும் முடியாது. மக்களுக்கு ஒரு குறையையும் நாங்கள் வைக்கவில்லை.

2001ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, கஜானா காலியாக இருந்தது. பெரும் கடன்சுமை, பின்னர் 3 ஆண்டுகாலம் கடும் வறட்சி, விளைச்சல் இல்லை, தண்ணீர் இல்லை,குடிநீர் இல்லை, பின்னர் சுனாமி, அதன் பிறகு வரலாறு காணாத மழை, வெளளம்.மத்திய அரசின் உதவியும் இல்லை.

ஆனால் இத்தனையையும் வெற்றிகரமாக சமாளித்து, அவ்வப்போது மக்களுக்குச்செய்ய வேண்டிய உதவிகளையும் செய்து, அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த நிதிநிலையை மீட்டு, இந்தியாவின் ன்னணி மாநலமாக தமிழகத்தை மாற்றியுள்ளோம்,பெருமைக்குரிய இடத்தில் வைத்துள்ளோம்.

சர்வதேச தொழில் முதலீட்டாளர்களின் விருப்ப மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.1991ம் ஆண்டு நான் ஆட்சியை ஏற்றபோது காலியாக இருந்த கஜானாவைஅரும்பாடுபட்டு சீர்படுத்தி விட்டுச் சென்றேன்.

1996ல் மீண்டும் கருணாநதி ஆட்சிக்கு வந்த பிறகு அதை சீர்குலைத்து விட்டார்,நாசப்படுத்தி விட்டார். மீண்டும் அதை சரி செய்து கொண்டு வந்துள்ளோம். இப்போதுமீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. இது குரங்கு கையில் பூமாலையைக்கொடுத்தது போலாகியுள்ளது.

கருணாநிதி எப்போதுமே சொன்னதைச் செய்ததில்லை. சொல்வது ஒன்று, செய்வதுஒன்று. இப்போது என்ன செய்யப் போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். தனிப் பெரும்பான்மையுடன் கடந்த முறை திமுக ஆட்சியில்இருந்தபோது கூட மக்களுக்காக எதையும் செய்யவில்லை கருணாநிதி.

அப்படி இருக்கையில் இப்போது அவரால் என்ன செய்து விட முடியும்?

சென்னையில் எங்களுக்கு பெரும் வெற்றி கிடைத்திருப்பது மிகப் பெரிய சாதனை.வீராணம் தண்ணீரைக் கொண்டு வந்ததற்காக மக்கள் கொடுத்துள்ள பரிசு இது.

சிறுபான்மை அரசாக திமுக அரசு பதவியேற்கிறது. இந்த அரசால் மக்களுக்குத்தேவையான நல்ல திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்ற முடியாது. ஒரு வருடம் கூடஇந்த அரசால் தாக்குப் பிடிக்க முடியாது.

சிறுபான்மை அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் அவர் கூட்டணிக் கட்சியினரின்நெருக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும்.அந்த நெருக்குதல்களை சமாளிக்கவே அவருக்கு நேரம் போதாது. இதில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாது.

தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி முறை முடிவுக்கு வந்து விட்டதாக நிான் நிச்சயம்கருதவில்லை. திமுகவுக்கு எதிர்காலம் கிடையாது. ஆனால் எதிர்காலம் அதிமுகவுக்குசொந்தமானது. அதிமுகவை யாராலும் அழித்து விட முடியாது. அதிமுகவினால்மட்டுமே எதிர்கால தமிழகத்தை வளமான பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

தேர்தலில் கிடைத்துள்ள தோல்வி அதிமுகவுக்கு பின்னடைவு அல்ல. மாறாக,தமிழகததிற்கே பெரும் பின்னடைவாகும். அதிமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாகஅதிகரித்துள்ளது என்றார் ஜெயலலிதா.

பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசுகையில்,

யாரும் வருத்தப்படத் தேவையில்லை, கவலை கொள்ள வேண்டிய அவசியம்இல்லை. 2001ம் ஆண்டு நடந்த தேர்தலை விட அதிக வாக்குகளை நாம்பெற்றுள்ளோம்.

1996ல் இதை விட மோசமான தோல்வியை சந்தித்த பின்னர் இதே இடத்தில் உங்களைநான் சந்தித்தபோது, மீண்டும் கழகம் ஆட்சி அமைக்கும் என்றேன். அப்போது நீங்கள்கூட அதை நம்பவில்லை. ஆனால் 2001ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தோம்.தமிழகத்தில் பொற்கால ஆட்சியைக்கொடுத்தோம்.

திமுக எதிர்காலம் இல்லாத கட்சி. எதிர்காலம் உள்ள கட்சி அதிமுக மட்டுமே.தமிழகத்தின் எதிர்காலமே அதிமுகதான். எதிர்காலத்தில் திமுக இருக்காது. ஆனால்அதிமுக இருக்கும். நானும் இருப்பேன்.

பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக அதிமுக சட்டசபையில் அமரப்போகிறது. ஆளுங்கட்சி அதைப்பார்த்து பயப்படப் போகிறது. நம்மைப் பார்த்துஅவர்கள்தான் பயப்படுகிறார்கள். நாம் கவலைப்படத் தேவையில்லை. எனக்கு எந்தபயமும் இல்லை.

சென்னையில் 7 தொகுதிகளைப் பிடித்திருக்கிறோம். திமுக கோட்டையை தகர்த்துவிட்டோம். பிரகாசமான எதிர்காலம் நமக்கு காத்திருக்கிறது. விரைவிலேயே ஆட்சிமாற்றம் ஏற்படும். மீண்டும் அதிமுக அரியணை ஏறும். இது நமக்கு ஏற்பட்டபின்னடைவு அல்ல, தமிழகத்திற்குத்தான்.

நமது நேரம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏனோ, தமிழகத்திற்குத்தான் நேரம்சரியில்லை. அதனால்தான் சிறுபான்மை அரசு அமைந்திருக்கிறது.

திமுகவினர் ஆட்சி நடத்துகிற லட்சணத்தை நாம் பார்க்கத்தானே போகிறோம். நாளைநமதே, இந்த நாடும் நிமதே என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+