ஓ.பன்னீர் செல்வம் எதிர்க்கட்சித் தலைவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை அதிமுக தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
இதன்மூலம் சட்டசபை நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா பங்கேற்கப் போவதில்லை என்பதுதெளிவாகிவிட்டது.சட்டசபைத் தோல்வியைத் தொடர்ந்து 2 நாட்களாக மிக ஆழ்ந்த அமைதி காத்து வந்தஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென வியாழக்கிழமை இரவில் அதிமுகதலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் ஜெயலலிதா தலைமையில் அதிக புதிய எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் சட்டசபை அதிமுக தலைவராக ஓ.பன்னீர் செல்வம்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக கே.ஏ.செங்கோட்டையனும் செயலாளராக சி.வி.சண்முகம்பொருளாளராக கருப்பசாமியும் கொறடாவாக ஜெயக்குமாரும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications