ஆட்சியில் பங்கு.. காங்கிரஸ் ராவடி ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸார் மனதில்எழுந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

இதன் மூலம் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்கும் என்பதை அவர் சூசகமாகவெளிப்படுத்தியுள்ளார்.

கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்துள்ளது. சிறுபான்மை பலத்துடன்,கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தனித்து ஆட்சி அமைத்துள்ள திமுகஅமைச்சரவையில் சேர மாட்டோம் என்று பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துவிட்டன.

ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் மூடு மந்திரமாக இருந்து வருகிறது. 50வருடமாக தமிழகத்தில் அதிகாரத்தையே ருசித்திராத காங்கிரசாருக்கு ஆட்சிப் பசிஎடுத்துள்ளது.

இந்த வாய்ப்பைத் தவர விட்டால் வாழ்ககையில் அதிகாரத்தை அடைவதேசாத்தியமில்லை என்பதால் பலரும் ஆட்சியில் பங்கு கேட்குமாறு கட்சித்தலைமையை அனத்தி எடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற எண்ணம் கட்சிஎம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் மனதில் எண்ணம் எழுந்துள்ளதாக வீரப்ப மொய்லிகூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபைத் தேர்தலில் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

தேர்தலுக்கு முன்பு ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது ஒரு பிரச்சினையாகதெரியவில்லை.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியினர் மத்தியிலும்,எம்.எல்.ஏக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் கூறியுள்ளேன்.

மேலும், அந்த திட்டம் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என்றும்யோசனை தெரிவித்துள்ளேன். தமிழகத்தில் சமூக நீதியுடன் கூடிய நல்லாட்சி கொடுக்கவேண்டும் என்றும் கருணாநிதியிடம் கூறியுள்ளேன்.

தற்போது, தமிழகத்தில் கட்சியை முன்னெடுத்துச் செல்வதையே முக்கியமாக கொள்ளவேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக காங்கிரஸ் கட்சியைமேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

இதற்கு கட்சி மேலிடம் ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார் மொய்லி.

இதற்கிடையே சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக 19ம்தேதி புதிய எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடக்கிறது.

முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் வீரப்ப மொய்லிநேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் பலர்சத்தியமூர்த்தி பவனில் கூடி ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று கூறிகோஷமிட்டனர்.

அப்போது அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ. வேலு ஆகியார் அங்கு வந்தனர்.அவர்களைப் பார்த்தும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில் பங்கு தர வேண்டும்என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களை அமைதிப்படுத்தினர். இதனால் கோஷங்கள்கொஞ்ச நேரம் நீடித்த பின்னரே ஓய்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+