கிளம்பினார் அலெக்ஸ்- வருகிறார் முகர்ஜி
சென்னை:
டிஜிபி பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ள ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் இன்று தனதுபொறுப்புகளை ஒப்படைத்து விட்டு புதிய பொறுப்புக்கு சென்றார். புதிய டிஜிபியாகநியமிக்கப்பட்டுள்ள முகர்ஜி புதன்கிழமை பொறுப்பேற்கிறார்.
கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற சில மணிநேரங்களில் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் மாற்றப்பட்டனர்.அதிமுக ஆட்சியில் கிட்டத்தட்ட கட்சிக்காரர்கள் போலவே செயல்பட்டு இவர்கள்தங்களது பெயரைக் கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரிபாதி சனிக்கிழமை இரவே தனதுபொறுப்பை ஏற்றுக் கொண்டு, நாராயணனை கோட்டையில் இருந்து கிளப்பிவிட்டுவிட்டார்.
இந் நிலையில் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள முகர்ஜி புதன்கிழமைஅப்பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது. முகர்ஜி தற்போது டெல்லியில் சிபிஐகூடுதல் இயக்குனராக இருந்து வருகிறார்.
தமிழகப் பணிக்குச் செல்ல வசதியாக அவரை மத்திய அரசு விடுவிக்கவுள்ளது.
இதற்கிடையே அலெக்சாண்டர் இன்று தனது பொறுப்புகளை தற்காலிக டிஜிபிஜெயினிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றார்.
போலீஸ் அகாடமியின் சிறப்பு அதிகாரி என்ற அதிகாரமில்லாத பதவியில்அலெக்சாண்டர் பணியாற்றுவார். வரும் 31ம் தேதியோடு அவர் ஓய்வு பெறுவதும்குறிப்பிடத்தக்கது.
முகர்ஜி பொறுப்பேற்கும் வரை ஜெயினே சட்டம், ஒழுங்கு டிஜிபிக்கானபொறுப்புகளை தற்காலிகமாக கவனிப்பார் என்று உள்துறைச் செயலாளர் பவன்ரெய்னா அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications