ஜெவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

ஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசின் கமாண்டோ படை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. ஆனால், பின்னர்தமிழக போலீஸ் கமாண்டோக்களைக் கொண்டே ஒரு சிறப்புப் படைப் பிரிவை உருவாக்கிக் கொண்டஜெயலலிதா, அவர்களையே தனது சிறப்புப் பாதுகாப்புக்கு நியமித்துக் கொண்டார்.

இந்த கருப்புப் பூணை பாதுகாப்புப் படையினர் தவிர மாநில போலீஸாரும் அதிகஅளவில் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜெயலலிதாவின் வீடு போயஸ் தோட்டத்தில் உள்ளது. ராதாகிருஷ்ணன் சாலை முதல்ஜெயலலிதாவின் வீடு வரை போலீஸார் குவிக்கப்பட்டு ஏராளமான சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து போயஸ் தோட்டம் செல்லும் சாலையில் நுழையும்அனைத்து வாகனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வந்தன. இந்த சோதனைக்குமுன்பு ரஜினிகாந்த் கூட தப்பவில்லை. அது சர்ச்சையைக் கிளப்பிய பின்னர் தீவிரவாகன சோதனை தவிர்க்கப்பட்டு சந்தேகப்படும்படியான வாகனங்களை மட்டுமேபோலீஸார் நிறுத்தி சோதனையிட்டு வந்தனர்.

குறிப்பாக ரஜினியின் கார் வந்தால் போலீசார் அதற்கு உடனடியாக வழி விட்டுவந்தனர்.

மேலும் ஜெயலலிதாவின் வீட்டுக்கு மன்பும் ஏராளமான போலீஸார்குவிக்கப்பட்டிருந்தார்கள். அக்கம் பக்கத்தில் உள்ள பல வீடுகள் அடாவடியாகவும்,மிரட்டப்பட்டும் காலி செய்யப்பட்டு அங்கெல்லாம் கூட போலீஸார்நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் அடுத்த வீடுகளின் மொட்டை மாடிகளில் எல்லாம் போலீஸார் பைனாக்குலர்சகிதம் ஏகே 47 துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இதை எதிர்த்தவீட்டினர் காலி செய்யப்பட்டனர்.

கிட்டத்தட்ட அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை ரேஞ்சுக்கு பாதுகாப்பும்கெடுபிடிகளும் இருந்தன. வானில் ஹெலிகாப்டர்கள் சுத்தாத குறை தான்.

இந்த போலீசாரின் வசதிக்காக மொபைல் உணவகங்கள் கூட இயங்கி வந்தன.

இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக கமாண்டோக்கள் வழங்கி வந்த பாதுகாப்புதிரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டு முன்பு சாதாரண துப்பாக்கி 303 எனப்படும் அந்த கால துப்பாக்கிகளைமட்டுமே வைத்துக் கொண்டுள்ள போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சோதனைச் சாவடிகள்எல்லாம் காலியாகக் கிடக்கின்றன. அடுத்த வீட்டு மொட்டை மாடிகளில் நின்றிருந்தபோலீசாரையும் காணவில்லை.

கடந்த முறை ஜெயலலிதா பதவியேற்றதும் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை முற்றிலுமாக வாபஸ்பெற்றது நினைவுகூறத்தக்கது.

இப்போதாவது ஜெயலலிதாவுக்கு சாதாரண துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. ஆனால், அதிமுகஆட்சியில் கொக்கு சுடும் துப்பாக்கி கொண்ட போலீஸ் கூட பாதுகாப்பு கூட கருணாநிதிக்குத் தரப்படவில்லை.

இதனால் திமுக தொண்டர் அணியினர் தான் அவருக்கு 24 மணி நேர பாதுகாப்பு அளித்து வந்தனர்.

ஆனால், முகம்மது அலி தலைமையிலான முரட்டு போலீசார் நள்ளிரவில் தொண்டர் அணியினரை நாலு சாத்துசாத்திவிட்டு, கருணாநிதியை வீடு புகுந்து தூக்கிச் சென்றதையடுத்துத் தான் மத்திய அரசின் கமாண்டோபாதுகாப்பு கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

மத்திய கமாண்டோ பாதுகாப்பில் உள்ள ஒருவரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் மாநிலபோலீசாரால் கைது செய்ய முடியாது என்பதால் அந்த பாதுகாப்பு கருணாநிதிக்கு கொடுக்கப்பட்டது.

இந் நிலையில் இப்போது முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்குச் செல்லும் தெருவின்நுழைவாயிலில் புதிதாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்லும்வாகனங்கள் சோதனை இடப்படுகின்றன.

அதேபோல வீட்டுக்கு முன்பும் போலீஸார் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்து போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல சிஐடிகாலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+