ஜெயா நியூஸ் சேனலுக்கு மத்தியஅரசு அனுமதி
சென்னை:
ஜெயா டிவியின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஜெயா பிளஸ் என்ற செய்தி சேனலுக்குமத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெயா டிவியை நடத்தி வரும் மாவிஸ் சாட்காம் நிறுவனம் செய்தி அலைவரிசைஒன்றைத் தொடங்குகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்ட அந் நிறுவனம் நேரடிஒளிபரப்புக்கான கருவிகளையும் நிறுவியது. இருப்பினும் மத்திய அரசின் தகவல்,ஒளிபரப்பு அமைச்சகம், நேரடி ஒளிபரப்பை மேற்கொள்வதற்கான உரிமத்தைவழங்காமல் இருந்தது.
இதையடுத்து மாவிஸ் சாட்காம் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காலக் கெடுஒன்றை மத்திய அரசுக்கு நிர்ணயித்து அதற்குள் ஜெயா டிவியின் கோரிக்கையைபரிசீலிக்குமாறு மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் ஜெயா பிளஸ் டிவிக்கான உரிமத்தை மத்திய தகவல் ஒளிபரப்புஅமைச்சகம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜெயா டிவியின் நிர்வாகம் மற்றும் சட்டப் பிரிவு துணைத் தலைவர்ரங்கநாதன் மும்பையில் கூறுகையில்,
ஜெயா பிளஸ் செய்தி சேனலை தொடங்க தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதிகொடுத்து விட்டது. விரைவில் செய்தி அலைவரிசை தொடங்கப்படும் என்றார்.
தமிழில் தற்போது சன் டிவி மட்டுமே 24 மணி நேர செய்தி சேனலை நடத்தி வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பாஜக ஆட்சியிலேயே செய்தி சேனலுக்கான அனுமதி பெறும் முயற்சிகளில்ஜெயலலிதா இறங்கினார். ஆனால், அந்த டிவியின் நிர்வாகி என்ற வகையில் தினகரன்எம்பி மீது அன்னிய செலாவணி விவகாரம் நிலுவையில் இருந்ததால், அந்தஅனுமதியைத் தர உள்துறை அமைச்சக அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து தினகரனை ஒதுங்க வைத்துவிட்டு புதிய விண்ணப்பம் செய்யப்பட்டுஇப்போது அனுமதியை வாங்கியுள்ளது ஜெயா டிவி என்கிறார்கள் உள் விவரம்அறிந்தவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications