செவ்வாய்-வெள்ளி: பள்ளிகளில் முட்டை
சென்னை:
பள்ளிகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சத்துணவுடன் முட்டைவழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
திமுக ஆட்சி பதவியேற்றதும் சத்துணவுடன் வாரம் இருறை முட்டை வழங்கப்படும்என அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பதவியேற்ற அடுத்த சிலநிமிடங்களிலேயே முதல்வர் கருணாநித பிறப்பித்தார்.இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த 1989ம் ஆண்டு மே மாதம் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள்மற்றும் மாணவ, மாணவியருக்கு புரதச் சத்துடன் கூடிய உணவு வழங்க இரண்டுவாரங்களுக்கு ஒரு முறை சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை முதன்முதலாக கருணாநிதி தலைமையிலான அரசுதான் தொடங்கி வைத்தது.
பின்னர் 1998ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் மற்றும்மாணவ, மாணவியருக்கு வாரம் ஒருமுறை முட்டை வழங்கும் திட்டமாக இந்தஅரசுதான் மாற்றி அமைத்தது.
2001ல் பதவியேற்ற கடந்த கால அரசு சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் மற்றும்மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கும திட்டத்தை திடீரென நிறுத்தி விட்டது.
பின்னர் 2004ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வாரம் ஒருமுறை முட்டை வழங்கும்திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. திமுக தேர்தல் அறிக்கையில்,சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை நிறைவேற்றும் பொருட்டு பதவியேற்றவுடன் முதல்வர் கருணாநிதிவாரம் இருமுறை முட்டை வழங்கப்படும் என அறிவித்து அதற்கான ஆணையைப்பிறப்பித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஜூலை மாதம் 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாள்என்று கொண்டாடப்படும் என இந்த அரசு அறிவித்துள்ளதையொட்டி அந்நாள் முதல்வாரம் இருமுறை முட்டை வழங்கப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பின் வருமாறு புரதச் சத்து மிகுந்த உணவு வழங்கும் நடைமுறையை மாற்றிஅமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை - வேக வைத்த உருளைக் கிழங்கு
செவ்வாய்க்கிழமை - வேக வைத்த ஒரு முட்டை
வியாழக்கிழமை - 20 கிராம் வேக வைத்த கருப்புக் கொண்டக் கடலை அல்லது 20கிராம் வேக வைத்த பச்சைப் பயறு
வெள்ளிக்கிழமை - வேக வைத்த ஒரு முட்டை வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படவுள்ள இளைஞர் சுயஉதவிக் குழுக்கள் இணைந்து இந்த முட்டைகள் கொள்முதல் செய்யப்படும் எனஏற்கனவே அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications