திமுக ஆட்சியில் பங்கு-டெல்லியில் காங். இன்று முக்கிய முடிவு
சென்னை:
சென்னையில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக ஆட்சியில்காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு தர வேண்டும் என்று கோரிதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:- ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை பின்பற்றி தமிழகத்திலும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி தலைமையில் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
கூட்டணி அரசில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற வேண்டும். இந்தவிஷயத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கவனத்திற்குக் கொண்டுசெல்வோம்.
- ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தனது முழுக் காலமும் பதவியில் நீடிக்கவேண்டும் என்று மக்கள் உறுதியாக உள்ளனர். அதை நிறைவேற்றும் பொறுப்புகாங்கிரஸுக்கு உண்டு.
- மாநில அரசு நிலையாக இருப்பதற்காகவும், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைபூர்த்தி செய்யவும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்அனைத்தும் தமிழக அமைச்சரவை மற்றும் அதன் பல்வேறு பணிகளோடும் மாநிலஅரசோடும் இணைந்து பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிகூறுகையில்,
தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸார், திமுக ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்என்று என்னைக் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த உணர்வுகளை கருணாநிதியிடமும், சோனியாவிடமும் நான் தெரிவித்துவிட்டேன்.
டெல்லிக்கு கருணாநிதி செல்லும்போது இதுகுறித்து சோனியா காந்தியுடன் பேசிமுடிவு எட்டப்படும். அவர்கள்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்என்றார் மொய்லி.
ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தீர்மானம் போட்டிருப்பது திமுகவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா கேட்கவில்லை- கருணாநிதி:
இந் நிலையில் ஆங்கில பத்திரிக்கைக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ளபேட்டியில்,
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸார் கோருவதாக பத்திரிக்கைகளில் வரும்செய்திகளை மாத்திரம் வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. இது தொடர்பாகசோனியா காந்தி என்னிடம் எதுவும் பேசவில்லை. அவரது பிரதிநிதிகள் கூட இதுபற்றி என்னிடம் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் முக்கிய முடிவு:
இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுமத்தியில் பதவியேற்று 22ம் தேதியுடன் 2 ஆண்டு நறைவடைகிறது.
இதையொட்டி காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இன்று இரவு7 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்துமுக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. அத்தோடு உயர் கல்வி நிறுவனங்களில்பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை,
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற தமிழக காங்கிரஸ்கட்சியின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டுமுடிவெடுக்கப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications