அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மரணம்
திண்டுக்கல்:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மாரடைப்பால்மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன். கடந்த 13ம் தேதி அவர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) அவருக்கு மதுரையில் பாராட்டு விழாவுக்குஏற்பாடு செய்திருந்தது.
இதற்காக நேற்றிரவு அவர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக்கிளம்பினார். அதே ரயிலில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுப.தங்கவேலன், தமிழரசி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் சென்றனர்.
தனி பெட்டியில் பயணித்த பி.டி.ஆருடன் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் ராமசாமியும் உடன் சென்றார்.
ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் அருகே அய்யலூர் என்றஇடத்தில் வந்தபோது பி.டி.ஆர். பழனிவேல்ராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்திற்குத் தகவல் தரப்பட்டு ஆம்புலன்ஸ்வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக ரயிலில்இருந்த டாக்டர் ஒருவர் பி.டி.ஆருக்கு முதலுதவி சிகிச்சை செய்தார்.
திண்டுக்கல் வந்ததும் ஆம்புலன்ஸில் பி.டி.ஆரை ஏற்றி சிட்டி மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பி.டி.ஆர்.வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் திண்டுக்கல்லில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிமருத்துவமனைக்கு விரைந்து வந்தார். மற்ற அமைச்சர்களும் பி.டி.ஆர். உடலுக்குமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பி.டி.ஆரி.ன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு உடன் சென்றனர்.பி.டி.ஆரை வரவேற்க மதுரை ரயில் நிலையத்தில் காத்திருந்த திமுகவினர் அவரதுஉடல் வருவதாக தகவல் கிடைத்ததும் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும்மூழ்கினர்.
சொக்கிகுளத்தில் உள்ள வீட்டிற்கு பி.டி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.அங்கு ஏராளமான திமுகவினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆன்மீகமும் திராவிட இயக்கமும்:
பி.டி.ஆர். என்று திமுகவினராலும், மதுரை மக்களாலும் அழைக்கப்பட்டபழனிவேல்ராஜன். நீதிக் கட்சித் தலைவராக இருந்த பி.டி.ராஜனின் புதல்வர் ஆவார்.
ஆன்மீகத்தில் மிகுந்த பற்று கொண்ட பி.டி.ஆர். மிகச் சிறந்த வழக்கறிஞர் ஆவார்.தீவிர கடவுள் பக்தி கொண்டவர் என்றாலும் ஆரம்ப காலத்திலிருந்தே திமுகவில் மிகத்தீவிரமாக இருந்தவர்.
கடந்த முறை திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அவருக்கு சபாநாயகர் பொறுப்பைகருணாநிதி வழங்கினார்.
ஆனால் தனது ஆன்மீக உணர்வுகளுக்கேற்ற இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சராக தன்னை நியமிக்குமாறு கருணாநிதியிடம் கோரி வந்தார்.
இருப்பினும் சபாநாயகர் பொறுப்பை நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றுகருணாநிதி அன்புக் கட்டளையிட்டதால் அதைத் தட்ட முடியாமல் சபாநாயகர்ஆனார்.
1996 முதல் 2001 வரை சட்டசபை சபாநாயகராக இருந்து அந்தப் பதவிக்குமரியாதையைத் தேடித் தந்தார்.
பண்பாளர் என்று திமுகவினரால் அழைக்கப்பட்ட பி.டி.ஆருக்கு முன்கோபம் ஜாஸ்தி.மேலும் கட்சிக்காக களப் பணிகள் செய்யாமல் மேல்மட்ட அரசியல் செய்பவர், கட்சியின் சார்பில் போராட்டம்நடத்தினால் கூட வர மாட்டார், ஜமீன்தார் மாதிரி செயல்படுவார் என்ற விமர்சனமும் இவர் மீது உண்டு.
மதுரை திமுகவில் அழகிரியின் ஆட்டம் அதிகமானபோது கட்சியை விட்டே விலகஆரம்பித்தார். கருணாநிதியையும் கூட கண்டுகொள்ளாமல் இருந்தார். பின்னர் அவரைஸ்டாலின் தான் மீண்டும் கட்சிப் பணிக்குள் தீவிரமாக இழுத்து வந்தார்.
மதுரை பகுதியில் தவிர்க்க முடியாத திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவராகவிளங்கிய பிடிஆர் முதல் முறையாக 1996ம் ஆண்டு மதுரை மேற்குதொகுதியிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 2001ல் நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்விஅடைந்தார். தற்போது மதுரை மத்திய தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் பிடிஆர் முன்பு விரும்பிய இந்து சமயஅறநிலையத்துறையை அவருக்கு கருணாநிதி கொடுத்தார்.
பதவியேற்ற ஒரு வாரத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
கருணாநிதி அஞ்சலி:
பழனிவேல்ராஜன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று விமானம் மூலம் மதுரை சென்றார்.
அவரது உடல் மதுரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரும் திரளான திமுகவினரும், பொது மக்களும்பிடிஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளும் மதுரைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் கருணாநிதி இன்று பிற்பகல் மதுரை சென்று பழனிவேல்ராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் அன்பழகன்,ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோரும் சென்றனர்.
திமுக 3 நாள் துக்கம் அனுசரிப்பு:
பி.டி.ஆர். மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு திமுகசார்பில் நடத்தப்பட இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறும், திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும் அனைத்து மாவட்ட திமுகவினருக்கும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications