அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: வைகோ
திருவண்ணாமலை:
சட்டசபைத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணிவைத்து மதிமுக தேர்தலை சந்திக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.
மதிமுக மாணவர் அணி துணைச் செயலாளர் பாசறை பாபுவின் திருமணம்திருவண்ணாமலையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வைகோ பேசுகையில்,மதிமுகவைத் தொடங்கி 13 ஆண்டுகள் ஆகின்றன. நான் கட்சி ஆரம்பித்தபோது,பதவி சுகம், அதிகார சுகத்தை எதிர்பார்க்காமல், பிரச்சினைகளை சந்திக்க சக்திஇருப்பவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள் என்றுதான் அழைத்தேன்.
இன்று வரை மதிமுக தனது லட்சியத்திலிருந்து ஒருபோதும் விலகியதில்லை.
13 ஆண்டுகள் கட்சியை நடத்தியும் இப்போதுதான் முதல் முறையாக சட்டசபைக்குள்நுழைகிறது மதிமுக. இதற்காக நாம் அதிமுகவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.அதிமுகவுக்கு நாம் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
இதுவரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை எந்தக் கட்சியும் அமைத்ததில்லை.இப்போது முதல் முறையாக சிறுபான்மை பலத்துடன் திமுக ஆட்சி அமைத்துள்ளது.ஆனால் இதுவரை இல்லாத அளவில் பலமான எதிர்க்கட்சியாக அதிமுக வலுவாகஉள்ளது.
அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி மக்கள் நலனுக்காக தொடர்ந்துபோராடும்.
தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மக்கள் எங்களோடுதான்இருக்கிறார்கள். தொண்டர்களும் எழுச்சியோடுதான் காணப்படுகிறார்கள்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அண்ணாவின் வழியில், இந்தத் தோல்வியைஏற்றுக் கொண்டு தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவோம் என்றார் வைகோ.
பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்றுகேட்டபோது, சட்டசபைத் தேர்தலில் தொடங்கிய இந்தக் கூட்டணி தொடருகிறது.உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் சேர்ந்தே தேர்தலை சந்திப்போம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications