கண்மாய் விழா நெரிசலில் சிக்கி ஒருவர் பலி
மதுரை:
மதுரை அருகே கள்ளந்திரி என்ற கிராமத்தில் கிராமத்து மீன் பிடி திருவிழாவில், கூட்டநெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார்.
தென் மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் கோடை காலத்தில் நீர்வற்றும். சுத்தமாக நீர் வற்றும் நிலையில் உள்ள கண்மாய்களில் ஊர் மக்கள்அனைவரும் குறிப்பிட்ட நாளில் இறங்கி மீன் பிடிப்பார்கள்.கள்ளழகர் கோலம் பூண்டு மதுரை சென்று வைகை ஆற்றில் அழகர் இறங்கி பின்னர்அழகர் கோவிலுக்கு சாமி திரும்பிய பின்னர் இந்த நிகழ்ச்சி நடக்கும்.
இந்த நிகழ்ச்சிக்கு கண்மாய் அழிக்கும் விழா என்று பெயர் சூட்டி ஜாதி, மத பாரபட்சம்இல்லாமல் அத்தனை பேரும் இறங்கி மீன் பிடிப்பார்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சி மதுரை அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில்,கண்மாய் அழிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சுத்துப்பட்டு 150க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்கலந்து கொண்டனர்.
அதிகாலையே 30,000 பேர் வரை திரண்டு விட்டதால் அந்தப் பகுதி முழுவதும்மக்கள் கடலாக காட்சி அளித்தது. கையில் கிடைத்த வலைகள், சல்லடைகள் எனஏகப்பட்ட மீன் பிடி பொருட்களுடன் சிறுவர் முதல் வயோதிகர்கள் வரை திரண்டுமொத்தமாக கண்மாய்க்குள் இறங்கினர்.
இதனால் கண்மாய்க்குள் பெரும்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில்சிங்கம்புணரி அருகே உள்ள சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துரை என்ற 47 வயதுநபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் மயக்கமடைந்து பத்திரமாகமீட்கப்பட்டனர்.
உயிரிழப்பு ஏற்பட்டாலும் கூட மக்கள் கண்மாயில் இருந்த மீன்கள் முழுவதையும்பிடித்த பின்னரே வெளியேறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications